Tuesday, April 28, 2026

மஇகா மகளிர் பிரிவு ஏற்பட்டில் சேலை கட்டும் பயிற்சி!

மஇகா மகளிர் பிரிவின் திறன் மேம்பாட்டு துணை குழு ஏற்பட்டில் சேலை கட்டும் பயிற்சி நடைபெற்று நேற்றைய முன்தினம் சான்றிதழ் வழங்கப்பட்டது.

சேலை கட்டும் பொழுது, இடுப்பில் செருகும் முன் மடிப்பு அல்லது கொசுவம்’தான் சேலை அணியும் பெண்களுக்கு எடுப்பான-அழகான தோற்றத்தை அளிக்கும்.

சேலை அணியும் பொழுது இந்த முன் மடிப்பு செய்யும் லாவகத்தையும் நுட்பத்தையும் கற்றுத் தருவதற்கான இந்தப் பயிற்சியில் கோலாலம்பூர் கூட்டுரசு வளாகம் சிலாங்கூர் மாநிலங்களில் இருந்து அதிகமான பெண்கள் கலந்து கொண்டாலும் நாடு முழுவதிலும் இருந்து அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர்.

ம.இ.கா-வில் உறுப்பியம் பெற்ற பெண்கள் தவிர மற்றவர்களும் என இருநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் இதில் கலந்து கொண்டனர் என்று இந்த நிகழ்ச்சியில் வரவேற்பு உரை நிகழ்த்திய ப்ளோரன்ஸ் தெரிவித்தார்.

இவர், மஇகா பண்டார் துன் ரசாக் தொகுதி மகளிர் பிரிவு தலைவியாகவும் தேசிய மகளிர் பிரிவு உச்ச மன்றத்திலும் பொறுப்பு வகிக்கிறார்.

தங்கள் தங்களுக்கு எத்தகைய உதவி தேவைப்பட்டாலும் மாயக்க மகள் கிருபை தயங்காமல் அணுகலாம் உதவி செய்ய நாங்கள் காத்திருக்கிறோம்; குறிப்பாக தொழில் முனைவராக இருக்கின்ற பெண்களுக்கு அதிக கடப்பாற்றுடன் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நிறைவாக மகளிர் பிரிவு தேசியத் தலைவி நான் சரஸ்வதி உரையாற்றினார்.

இரண்டு மாதங்களுக்கும் இதே போன்ற பயிற்சி பெண்களுக்காக ஏற்பாடு செய்தோம் அப்பொழுது 100 பெண்கள் வரை கலந்து கொண்டனர் இந்த முறை மிக அதிகமாக கலந்து கொண்டது தங்களுக்கு ஊக்கம் அளிப்பதாக தெரிவித்தார்.

இது மட்டும் அல்ல ‘ஏஐ’-செய்யறிவு தொழில்நுட்பம், டிக் டாக் நுட்பம் குறித்தெல்லாம் ஏராளமான பயிற்சிகளை இந்திய மகளிர்க்காக இதற்கு முன்னர் செய்திருக்கிறோம்.

இந்திய பெண்களின் மறுமலர்ச்சிக்காக இன்னும் ஏராளமான பயிற்சிகளையும் உதவியையும் நல்க மாயக்கா மகளிர் பிரிவு என்றும் தயாராக இருக்கிறது குறிப்பாக, சேலை கட்டும் பயிற்சியை எல்லா மாநிலங்களிலும் நடத்தவிருக்கிறோம் என்று சரஸ்வதி தெரிவித்தார்.

நிறைவாக பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை