
நாடு முழுவதிலும் இருந்து 60 மோட்டார் சைக்கிள் குழுவினர் நேற்று இரவு சிரம்பானில் ஒன்று கூடினர்.
ஸ்மார்ட் ரைடர்ஸ் என்னும் மோட்டார் குழு சார்பில் இந்த ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது
சிரம்பான், காடோங் ஜெயா, பெட்ரோன் பெட்ரோல் நிலையத்தில் ஒன்று திரண்ட இவர்கள் சாலை அதிரும் அளவிற்கு அணி வகுத்து ஊர்வலமாக வந்து View Park Restaurant என்ற இடத்தில் தேநீர் ஒன்று கூடல் என்ற பெயரில் ஒன்று கூடினர்.

ம இ கா மத்திய செயலவை உறுப்பினரும் மஇகா தேசிய விளையாட்டுப் பிரிவு தலைவருமான Endrew அனைவரையும் வரவேற்றதுடன் மோட்டார் சைக்கிள் ஓட்டுவோரின் கடப்பாடு கட்டுப்பாடு குறித்தெல்லாம் பேசினார்.
டத்தோ பாலன் நாயர் ஒருங்கிணைப்பில் இந்த ஒன்று கூடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

வட்டார அளவில் சிறு குழுக்களாக இயங்கி வரும் ஸ்மார்ட் ரைடர்ஸ் அனைவரையும் ஒன்றிணைக்கவும் ஒவ்வொருவரும் தத்தம் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் தேசிய அளவில் ஒன்றுபட்டு தேசிய அளவில் செயல்படவும் இந்த நிகழ்ச்சி
ஏற்பாடு செய்யப்பட்டதாத Endrew தெரிவித்தார்.
300 மோட்டார் சைக்கிள் ஒட்டிகள் ஒரே இடத்தில் ஒன்று திரண்ட இந்த நிகழ்ச்சி மலேசிய சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றது.
இந்த நிகழ்ச்சியில்109 நாடுகளில் 2,08,941 கிலோமீட்டர் தூரத்திற்கு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த சு. கதிரவன் சிறப்பிக்கப்பட்டார்.
புவி வெப்பமாதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பசுமைமீதும் வன செல்வத்தின்மீதும் பொதுமக்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் நாள் 62 வயதில் இந்தப் பயணத்தை மேற்கொண்ட கதிரவன் இந்த ஆண்டு மே ஒன்பதாம் நாள் 65 வயதை எட்டிய நிலையில் தன்னுடைய தொடர் மோட்டார் சைக்கிள் பயணத்தை நிறைவு செய்தார்.
109 நாடுகளில் பயணம் செய்தபோது, ஆங்காங்கே 190 மரங்களையும் கதிரவன் நட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



