
மீபா எனப்படும் மலேசிய இந்தியர் கால் பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் நாளை செப்டம்பர் 5-இல் பினாங்கு பாடாங் போலா அரங்கில் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.

மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ மு. சரவணன் இந்தப் போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கவிருக்கிறார்.
மாலையில் சிறப்பு வருகை தரும் பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ ராஜூ வெற்றிபெறும் குழுக்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்குவார்.
இந்தப் போட்டியில் சிலாங்கூர் மாநில இளம் கால்பந்து வீரர்களை ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் பங்கேற்கின்றனர்.

பெட்டாலிங் ஜெயா கால்பந்து சங்கத்தின் தலைவர் த. பத்துமலை, துணைத் தலைவர்கள் கென்னத் கண்ணா, குணா ஆகியோர் தலைமையில் இன்று சிலாங்கூர் குழுவுக்கு கொடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிலாங்கூர் காற்பந்து சங்கத்தின் செயலாளர் ஈஸ்ரின் நபில் மற்றும் ஆட்சிக் குழு உறுப்பினர் சேகர் சந்திரன் உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.

பினாங்கில் நடைபெறும் மீபா பியோண்ட் கால்பந்துப் போட்டியில் சிலாங்கூர் குழு சாம்பியன் பட்டத்தை வெல்ல போராடும் என்று பத்துமலை தெரிவித்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிலாங்கூர் குழு சாம்பியன் பட்டத்தை வென்றது.
இம்முறையும் சாம்பியன் பட்டத்தை வென்று வெற்றியோடு திரும்ப வாழ்த்துவதாக அவர் தெரிவித்தார்.


