Sunday, April 19, 2026

மாற்றுத் தொழிலாளர்களை அமர்த்திக் கொள்ள அரசு அங்கீகரிக்க வேண்டும்: பிரெஸ்மா-பிரிமாஸ் கூட்டாகக் கோரிக்கை

மலேசிய இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கம் பிரெஸ்மாவும் (PRESMA) மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கம் பிரிமாசும்(PRIMA S) தங்கள் உணவகங்களில் மாற்றுத் தொழிலாளர்களை அமர்த்திக் கொள்வதற்கு மடானி அரசு உடனே அங்கீகரிக்க வேண்டும் என்று கூட்டாக கோரிக்கை வைத்துள்ளன.

முஸ்லிம் உணவகம் அல்லது நாசி கண்டார் உணவகம் என்று அழைக்கப்படுகின்ற முஸ்லிம் உணவகங்களிலும் அதைப்போல வாழை இலை உணவகங்கள் என்று அழைக்கப்படுகின்ற இந்தியர் அல்லது தமிழர் உணவகங்களிலும்
வேலை செய்யும் அந்நியத் தொழிலாளர்கள், தங்களின் ஒப்பந்த காலம் முடிந்து சொந்த நாட்டிற்கு திரும்புகின்ற வேளையில் அவர்களுக்கு பதிலாக மாற்றுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என்று பிரிமாஸ் அமைப்பும் பிரெஸ்மா சங்கமூம் மத்திய கூட்டு அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளன

உதாரணத்திற்கு ஓர் உணவகத்தில் பணிபுரியும் பத்து வெளிநாட்டுத் தொழிலாளர்கள், தங்களின் ஒப்பந்த காலம் முடிந்து நாடு திரும்பினால் அவர்களுக்கு பதில், புதிதாக பத்து தொழிலாளர்களை அமர்த்திக் கொள்ள அரசாங்கம் முன்பு வாய்ப்பு வழங்கியது.

இதன் மூலம் உணவக உரிமையாளர்கள் எவ்வித சிக்கலும் இன்றி தங்கள் உணவகங்களை நடத்தி வந்தனர்.

ஆனால் அண்மைய ஆண்டுகளாக Gantian எனப்படும் மாற்றுத் தொழிலாளர்களை அமர்த்திக் கொள்ள முடியாமல் உணவக உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த சிக்கல் தொடர்பாக அரசாங்கத்திடம் தொடர்ந்து முறையிட்டு வருகின்றோம். ஆனால் நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு முக்கிய பங்காற்றுகின்ற உணவகத் துறை மீது அரசு அக்கறை கொள்ளாமல் இருக்கிறது என்று இவ்விரு அரசு சாரா அமைப்புகளின் தலைவர்களும் வருத்தம் தெரிவித்தனர்

இனியும் காலம் தாழ்த்தாமல் உள்துறை அமைச்சு மாற்று தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று பிரெஸ்மா தலைவர் டத்தோ ஜவஹர் அலியம்
பிரிமாஸ் தலைவர் டத்தோ சுரேஸ் (எ) கோவிந்தசாமியம் இதன் தொடர்பில் இன்று கோலாலம்பூர் இம்பியான் தங்கும் விடுதியில் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் கூட்டத்தில் வலியுறுத்தினர்.

தவிர, 18 முதல் 45 வயது வரை என்று தற்போது அந்நியத் தொழிலாளர்கலுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது வரம்பை 18 முதல் அறுபது வயது வரை என்று தளர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்

கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் வெளிநாட்டு தொழிலாளர்களை புதிதாக அமர்த்துவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.

எனவே,
உணவகங்கள் மேலும் பாதிக்காமல் இருக்க அரசாங்கம் அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையில் உணவகத் தொழிலில் தேக்கமும் பாதிப்பும் ஏற்படாமல் இருக்க உணவகங்களில் வேலைசெய்ய 25,000 அந்நியத் தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். இதற்கும் அனுமதி வேண்டும் என்று இந்த இரு உணவக உரிமையாளர்களின் சங்கங்கள் அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்துள்ளன.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை