
(எம். ஏ. அலி)
மனிதன் வாழும் பொழுது கிடைக்கும் மரியாதையை விட அவன் இல்லாதபோது கிடைப்பது சிறப்பானது என்று ‘இலக்கிய வேந்தர்’ டத்தோஸ்ரீ மு. சரவணன் ஈப்போ கண்ணதாசன் விழாவில் குறிப்பிட்டார்.
இலக்கியத்தை அமைதியாக கேட்டு இரசிக்க வேண்டும். அப்போதுதான் சுவைக்கும். கவியரசு கண்ணதாசனின் பல பாடல்களும் இந்த வகையில் அமைந்தவை என்று கண்ணதாசன் அறவாரியத்தின் தலைவரும், மஇகா தேசிய துணைத்ததலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.

ஈப்போவில் நடைபெற்ற கண்ணதாசன் நூற்றாண்டு விழாவில் அவர் பேசினார்!
“ஒரு மனிதனின் இறப்புக்கு பிறகும் அவனுக்கு கிடைக்கும் மரியாதை சிறந்ததாகும். கவியரசர் கண்ணதாசன் இந்த வரிசையில் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்”.
எதையும் மாற்றிப் பேசும் தைரியம் கண்ண தாசனுக்கு உண்டு. காலையில் ஒன்றும், அதையே மாலையில் வேறொன்றுமாக மாற்றிப் பேசுவார். கேட்டால், நான் மாறவில்லை. மாற்றங்கள் நேரும்போது நானும் மாற்றி பேசுகிறேன் என்பார்.

அவரின் பாடல்களில் பெண்களை தாங்கிப் பிடித்து பாடிய கவிஞராக அவர் திகழ்ந்தார் என்று சரவணன் கூறினார்.
இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டு ஒருங்கிணைப்பை டத்தோ இளங்கோ வடிவேலு சிறப்பாக செய்து இருந்தார்.
பேரா மாநிலத்திலிருந்து 700க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்!



