Monday, April 20, 2026

திருச்செந்தூர் தங்கும் விடுதியில் வாகன வசதி!

தமிழ்நாட்டில் இந்து சமய அறுசமய கொள்கைகளில் ஒன்றான கௌமார வழிபாட்டு நாயகனும் தமிழ் கடவுளுமாகிய திருமுருக திருக்கடவுளுக்கு அறுபடை வீடுகள் உள்ளன.

அவற்றில் ஒரு படை வீடான திருச்செந்தூர் நகரம், முருக பக்தர்கள் சங்கமிக்கின்ற ஒரு வழிபாட்டு தலம்.

இறை அன்பர்களும் சுற்றுப்பயணியரும் அதிகமாக வருவதால் இங்கு மிகுதியான தங்கும் விடுதிகள் உள்ளன. தற்பொழுது ஆலயத்தின் சார்பிலும் தங்கும் விடுதிகள் நிறுவப்பட்டுள்ளன.

இந்த சூழலில் திருமண மண்டப வசதியுடன் கூடிய ஒரு தங்கும் விடுதியில் வந்து தங்குகின்றவர்கள் ஆலயத்திற்கு சென்று வருவதற்காக எளிய வாகன வசதியை ஏற்படுத்தி உள்ளனர்.

இங்கு மின்சார ஸ்கூட்டர் என்னும் இருசக்கர வாகன வசதியை ஆலயத்திற்கு செல்கிறவர்களுக்காக ஏற்படுத்தி உள்ளனர்.

தற்பொழுது திருமுருக கடவுளுக்கு உரிய தைப்பூசத் திருநாள் கொண்டாடப்படுகின்ற சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட தங்கும் விடுதிக்கு வருகின்ற இறைநேச அன்பர்களுக்கு இந்த வசதி பெரும் உதவியாக இருக்கும். இத்தகைய அணுகூலம் எல்லா விடுதிகளிலும் இடம்பெறக்கூடும்.

தகவல்: முரசு ரமேஷ்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை