
செம்மொழியான தமிழ் கிரேக்கம், இலத்தீன், சற்கிருதம் உள்ளிட்ட மொழிகளுக்கு எண்ணிறந்த சொற்களை கொடையளித்த மொழி என்பதை நிறுவிய தமிழறிஞர் தேவநேய பாவாணர்.
தமிழ் மொழி, உலக மொழிகளில் மூத்ததும் மிக தொன்மையானதும் பழங்காலத்திலேயே செம்மையுற்று மேன்மை அடைந்த மொழி எனவும் அத்தகைய தமிழ் மொழி, திராவிடத்திற்கு தாயாகவும் ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கியது என அடித்து நிறுவியவர்- வாதாடியவர் தேவநேயப் பாவாணர்
தமிழ் மொழிக்கு வாய்த்துள்ள வேர்ச்சொல் வளம், சீர்மை ஆகியவற்றை சுட்டிக்காட்டியதுடன் தமிழ் மொழியின் பரந்துபட்ட வளர்ச்சிக்கான வழியை தான் இயற்றிய நூல்களின்வழி எடுத்துக்காட்டியவர் தேவநேய பாவாணர்
திராவிட மரபு தோன்றிய இடம் குமரி நாடு என்பதை நிலை நாட்டிய தமிழ் மாண்பாளர் தேவநேய பாவாணர்
தமிழ் தேசிய தந்தையாக போற்றப்படும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் ஆசிரியராக விளங்கியவர் தேவநேய பாவாணர். அத்தகைய பெருமகனாருக்கு இன்று பிறந்தநாள்! அவரை குமரி வாஞ்சையுடன் நினைவு கூறுகிறாள்!!


