Monday, April 20, 2026

கோலாலம்பூரில் ரகுமான்’ஸ் மாசாலைத் தயாரிப்புகள்: தமிமுன் அன்சாரி தலைமையில் அறிமுகம்

தமிழ் நாட்டு மக்கள் ஜனநாயக கட்சி-மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அண்மையில் மலேசியாவிற்கு வருகை மேற்கொண்டு இருந்தார். அப்போது மலேசிய சமையல் துறையில் அதிகமாக பயன்படுத்தப்படும் ரகுமான்’ஸ் மசாலைத் தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன.

மலேசியாவில் இயங்கி வரும் ரகுமான்’ஸ் மசாலை நிறுவனம் தென்கிழக்கு ஆசிய சந்தைகளை வேகமாக வென்று வருகிறது.

இந்த நிலையில், அதன் உரிமையாளர் கலீல் மஜீத், தன் மசாலைத் தொழிற்சாலைக்கு வருமாறு மு.தமிமுன் அன்சாரிக்கு
அழைப்பு விடுத்திருந்தார்

அங்கு ரகுமான்’ஸ் நிறுவனத்தின் சார்பில் புத்தாக்க சுவையோடு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் மிளகாய், மஞ்சள், சீரகம், மிளகு உள்ளிட்ட மசாலைத் தூள் பொட்டலங்களையும் இறைச்சி-மீன் மசாலைத் தூள் பொட்டலங்களுடன் கோழிக் குழம்பு மசாலை, பிரியாணி மசாலைத் தயாரிப்புகளையும் தமிமுன் அறிமுகப்படுத்தினார் .

பிரபல பன்னாட்டு தொழில் நிறுவனமான SME நிறுவனத்தின் தலைவர் டத்தோ வீரா. நைனா முகம்மது(Agate), சுபைதா உணவகக் குழும நிறுவனர் டத்தோ அப்துல் அஜீஸ், சிங்கப்பூர் TEST LEADS மின்னனு குழுமத்தின் நிறுவனர்களில் ஒருவரான சாகுல் ஹமீது ஆகியோரும் மாதிரி மசாலைத் தூள் பொட்டலங்களைப் பெற்றுக் கொண்டனர்.

உணவகத் தொழில் துறையில்
வேகமாக
முன்னேறிவரும் இந்நிறுவனம் மலேசியா, சிங்கப்பூர், புருணை, வியட்நாம் நாடுகள் உட்பட மத்திய கிழக்கு நாடுகளின் சந்தை வாய்ப்புகளையும் வெற்றிகரமாக கைப்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் மற்றொரு நிறுவனமான ‘சுவை’ , குங்குமப்பூ, தேயிலைத் தூள் உள்ளிட்ட இதர தயாரிப்புகளிலும் முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய மசாலை மற்றும் உணவுப் பொருள்களை அறிமுகம் செய்த தமிமுன் அன்சாரி, உணவு சந்தையில் இந்த பொருள்கள் பன்னாட்டு அளவில் நிலைத்த வர்த்தக வாய்ப்பைப் பெற வாழ்த்துவதாகத் தெரிவித்தார்-

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை