Monday, April 20, 2026

ஷா ஆலம், மாநகர் மன்ற மேம்பாட்டுத் துறை இயக்குநராக இஸ்மதிநூன் நியமனம்

ஷா ஆலம், மாநகர் மன்ற மேம்பாட்டுத் துறை இயக்குநராக இஸ்மதிநூன் பின் ஹாஜி அப்துல் ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிலாங்கூர் மாநிலத்தின் ‘குரோஷ் ஃபெர்ட்டிலைசேசன்’ என்னும் சிறப்புத் திட்டத்தின்கீழ் ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் மேம்பாட்டுத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள இஸ்மதிநூன் பதவிக் காலம், பிப்ரவரி 3 ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

புதிய பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ள இஸ்மதிநூன், ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் உன்னத நோக்கத்திற்கு ஏற்ப சிறப்பாக செயல்பட பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத் தலைவர் டத்தோ பண்டார்(நகரத் தந்தை), துணை டத்தோ பண்டார் உட்பட பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின் அனைத்து பணியாளர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

இஸ்மதிநூன், பெட்டாலிங்ஜெயா பழைய நகரத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.

அவரின் தந்தை ஹாஜி அப்துல் ரகுமான்.பெட்டாலிங் ஜெயாவிலுள்ள டன்லப் வட்டகை(Tyre) நிறுவனத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்தவர்.

பெற்றோர், உடன் பிறந்தோர், நண்பர்கள், சக அதிகாரிகள் வழங்கிய ஒத்துழைப்புதான் தன் வளர்ச்சிக்கு காரணம் என்று இஸ்மதிநூன் தெரிவித்தார்

இப்பதவியின்வழி மக்களுக்கு சிறப்பாக பொதுசேவை வழங்குவேன் என்று இஸ்மதிநூன் அப்துல் ரகுமான் மகிழ்ச்சியோடு கூறினார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை