
2025 பத்து மலை தைப்பூச திருவிழா தொடர்பில் கோலாலம்பூர் அருள்மிகு மாரியம்மன் ஆலயத்தில் இருந்து தேர் புறப்பட்டு பத்து மலை முருகன் கோயிலுக்கு சென்றபொழுதும் தைப்பூச திருவிழாவிற்குப் பின் அங்கிருந்து புறப்பட்ட தேர், தமிழ்க் கடவுள் திருமுருகனை சுமந்தமடி தாய்க் கோயிலுக்கு திரும்பிய பொழுதும் மஇகா தேசிய தலைமையகத்தின் சார்பில் வழிபாடு செய்யப்பட்டது.
மலேசிய இந்தியர் காங்கிரஸ்-மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ச. விக்னேஸ்வரன், தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் மு சரவணன், தேசிய பொதுச்செயலாளர் டத்தோ ஆனந்தன், தேசிய ஊடகப் பிரிவு தலைவர் எல். சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட தலைவர்கள் தேரை எதிர்கொண்டு பூசை செய்து வணங்கி வழி அனுப்பி வைத்தனர்
பிப்ரவரி 9, ஞாயிறு இரவு கோலாலம்பூர் அருள்மிகு மாரியம்மன் கோயிலில் இருந்து புறப்பட்ட தேர், நேற்று புதன்கிழமை மாலை பத்துமலையில் இருந்து திரும்பிய இன்று வியாழன் விடியற்காலையில்தான் மாரியம்மன் கோயிலை அடைந்தது

இடையில், ஜாலான் ஈப்போவில் டத்தோ சுரேஷ் தண்ணீர்ப் பந்தல் அமைத்து, பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் குடிநீர், சுவைபாணம், சிற்றுண்டி அளித்து உபசரித்தார்.


