Thursday, March 19, 2026

மலேசியாவின் உயரமான மனிதனோ இந்த கூடைப்பந்து விளையாட்டு வீரர்

2மீட்டர் பத்து செண்டிமீட்டர் உயரம் உடைய சர்வின், ‘சீ’ விளையாட்டு(SEA Games)ப் போட்டிக்காக தயாராகி வரும் நாட்டின் வடபுலத்து இளைஞர்.

கூடைப்பந்து விளையாட்டு வீரரான இந்த இளைஞர், மலேசியாவின் உயரமான மனிதன் என்று கருதப்படுகிறார்.

சர்வின் சிவா ரகு, பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்; கூடைப் பந்து விளையாட்டில் தேர்ந்தவரான இவர், தேசிய கூடைப்பந்து விளையாட்டுக் குழுவிலும் இடம்பெற்று இருக்கிறார்; தேசிய கூடைப்பந்து விளையாட்டுக் குழுவிலும் இடம்பெற்று இருப்பதால் தலைநகரில் பண்டார் உத்தாமா(Bandar Utama) என்ற இடத்தில் தங்கி சீ விளையாட்டுப் போட்டிக்காக தயாராகி வருகிறார்.

23 வயதான இந்த இளைஞர் பெட்டாலிங் ஜெயா தாமரை உணவகத்திற்கு வருகை தந்தபொழுது அங்கு இருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

210 சென்டி மீட்டர் உயரம் உடைய சர்வீன், தன் நண்பர்களான தயாளன் ஜி. வடிவேலவன், லட்சுமணன் கணபதி ஆகியோருடன் தாமரை உணவகத்திற்கு வந்த பொழுது, தாமரை வர்த்தக குழும இயக்குனர் டத்தோ ரெனா ராமலிங்கம், விளையாட்டு வீரர்களான மூவரையும் வரவேற்று உபசரித்தார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை