
சகவாழ்வு சக நேசம் சக மரியாதையும்சார் ஒருமைப்பாடும் ஒற்றுமையும்தான் இந்த தேசத்தின் அடித்தளம்.
இதை மறந்து விட்டதால் என்னவோ இந்த சோளக் கோணங்கி, பக்குவப்பட்டிருக்க வேண்டிய 64 வயதிலும்கூட வெம்பி வீச்சம் அடிக்கும் மாம்பிஞ்சை போல திரிகிறது.
பொதுவாக வியாபாரிகள் என்றால் கனிந்த முகத்தோடும் இனிய தோற்றத்தோடும் கைவசம் இருக்கின்ற பண்டங்கள் அத்தனையும் விற்று முதல் ஆக்கத்தான் பார்ப்பார்கள்.
இதுதான் சோளக்கொல்லை குருவிடம் மேலே உள்ளதை அடகு வைத்து விட்டதே, என்ன செய்வது?
அதனால்தான் நட்புக்கரம் வேண்டிய சிறுபான்மை இனத்தின்மீது இப்படி அக்கப்போர் புரிந்து கடைசியில் வேறுவழி இல்லாமல் மண்டியிட்டு இருக்கிறது!
சிப்பாங் கோத்தா வாரிசான் (Sepang, Kota Warisan) என்னும் பகுதியை சேர்ந்த இது, இந்தியர்களுக்கு சோளம் விற்கப்படாது என்று சிறு தட்டி வைத்து வியாபாரம் செய்திருக்கிறது. கடைசியில் வட்டார இந்தியர்களிடம் காவல்துறையினர், ஒற்றுமைத் துறைசார் ஆளுமையர் முன்பு தோப்புக்கரணம் போட்டும் எடுபடவில்லை; விடுபடவில்லை!.
இனத்துவேசம் என்றால் சும்மாவா என்ன? காவல்துறை வளைத்து நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏற்றிவிட்டது. கடைசியில்!
சிப்பாங் செசன்ஸ் நீதிமன்றம் Penal Code சட்டம் 505 பி-யின்படி 400 வெள்ளி(Ringgit Malaysia 400) தண்டத்துடன் ‘பளார்’ விட்டுள்ளது!
பொழுதும் கெட்டு சோள வியாபாரமும் பழுதுபட்டு, அத்துடனாவது கதை நின்றதா என்றால் சிறை கம்பிகளுக்கு பின்னால் இருக்கும் மனைவியைப் பார்த்து உள்ளதும் போச்சுதடி நொள்ளைக் கண்ணாட்டி என்று பரிதாபம் காட்டி நிற்கிறது இந்த கோணங்கி.
பின் என்னவாம்? அடையாள ஆவணம் இல்லாத இந்தோனேசியை பெண்ணுடன் குடும்ப கூத்து நடத்தினால் நீதிமன்றமும் சட்டமும் காவல்துறையும் சும்மா இருக்குமா என்ன?
1959 குடி நுழைவு சட்டம் அதன்மீது பாய்ந்த நிலையில் இப்பொழுது மூன்று மாதங்களுக்கு கம்பிகளுக்கு பின்னால் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இப்படி சட்டத்தை மதிக்காத இது இரண்டும் செய்த அக்கப்போரையும் கூத்தையும் பார்த்தீர்களா? இதற்கு பெயர்தான் குறைகூடம் கூத்தாடும் என்பதோ??


