Wednesday, April 22, 2026

இது இலக்கிய சந்திப்பா அல்லது மருத்துவ சந்திப்பா?

நாட்டின் புகழ் பெற்ற முன்னிலை இருதய நோய் வல்லுநர் டத்தோ டாக்டர் தமிழ்ச் செல்வன் முத்துசாமி அவர்களை, மருத்துவ ஆலோசனைக்காக அவரின் கிளினிக்கில் (CVSKL). சந்தித்தேன்.

நான் தமிழ்ப்பள்ளியில் படித்தவன் என்று கூறியதும் அவர் மகிழ்ச்சியடைந்தார்.

அவரும் ஜோகூர் மாநிலத்து மாசாய் தமிழ்ப்பள்ளியில் படித்ததையும் தம் தந்தையார் அப்பள்ளியின் வளர்ச்சியில் காட்டிய அக்கறை பற்றியும் மகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.

மிக அன்பாகவும் அரவணைப்பாகவும் பேசினார். இனிமையாகப் பழகும் ஒரு பண்பாளராக விளங்கும் மருத்துவ நிபுணரைச் சந்தித்தில் மகிழ்ச்சியடைந்தேன்.

தொடர்ந்து நான் இயற்றிய ‘கருவறையில் தொடங்கும் அறிவார்ந்த பெற்றோரியல்’ என்னும் நூலை வழங்கினேன்.

மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட அவர், வாசிப்பேன் என்றார்.

(சமூக ஆர்வலர், நூலாசிரியர், மனநல ஆலோசகர் கே ஏ குணா)

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை