Monday, April 20, 2026

நாட்டின் ஒன்பதாவது பிரதமர் இஸ்மாயில் சப்ரி மருத்துவமனையில் அனுமதி!

நாட்டில் அரசியல் நிலைத்தன்மை பாதிக்கப்பட்டிருந்த முக்கியமான காலகட்டத்தில் நாட்டை வழிநடத்தியவர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்.

கொரோனா பருவத்தில் நாட்டு மக்களுக்கு சிறந்த சேவை வழங்கிய பெரா நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான இஸ்மாயில் சாப்ரி நேற்று பிப்ரவரி 20 வெள்ளி நள்ளிரவில் திடீரென்று நினைவுதப்பியதன் விளைவாக இன்று விடியற்காலை 2:30 மணி அளவில் Kota Damansara, Sunway Medical Centre- மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக அவரின் மேநாள் உதவியாளர் அக்மால் ஹக்கீம் தெரிவித்தார்.

அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள இஸ்மாயில் சப்ரி குறித்து இதுவரை எந்தத் தகவலும் தெரியவில்லை என்று அவரின் முன்னாள் உதவியாளரான யூரி அசர் மஸ்லான்(Yuri Azhar Mazlan) தெரிவித்தார்

இஸ்மாயில் சப்ரியுடன் மருத்துவமனையில் உள்ள அவரின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட அனைவரும் மருத்துவரின் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் அவர் சொன்னார். அதேவேளை இஸ்மாயில் சப்ரி தற்போது திடமான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறைந்த காலமே நாட்டை வழி நடத்தினாலும் மக்களால் விரும்பப்பட்ட ஒன்பதாவது பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் வழக்கறிஞரும் ஆவார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை