
கோலாலம்பூர் ஜாலான் ஈப்போ(ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷா) Jalan Ipoh(Jalan Sultan azlan Shah) அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயத்தில் இம்மாதத் தொடக்கத்தில் (பிப்ரவரி 03) திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது.
அதன் தொடர்பில் தற்பொழுது மண்டல பூசை நடைபெற்று வருகிறது. இம்மண்டல பூசை தொடர்பில் பிப்ரவரி 25-ஆம் நாள் உபயத்தை தொழில்முனைவர் தண்ணீர் குடும்பத்தினர் ஏற்று நடத்தினர்.

இதில் லோட்டஸ் குழும இயக்குனர் ரெனா ராமலிங்கம், மக்கள் ஓசை நாளிதழ் இயக்குனர் டத்தோ கோபால கிருஷ்ணன் உள்ளிட்ட பிரமுகர்களும் நூற்றுக்கணக்கான பக்தர்களும் கலந்து கொண்டனர்.


