
மலேசியாவில் வாழ்கின்ற இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் நாளை மறுநாள் மார்ச் மாதம் இரண்டாம் நாள் ஞாயிற்றுக்கிழமை நோன்பு தொடங்குவர் என்று அரச முத்திரைக் காப்பாளர் Tan Sri Syed Daniel Syed Ahmad அறிவித்துள்ளார்.
நோன்பு தினத்தை உறுதிப்படுத்துவதற்காக நாடு முழுவதிலும் 29 இடங்களில் பிறை பார்க்கப்பட்டன.

இதன் தொடர்பில் ஆட்சியாளர் மன்றக் கூட்டத்திற்குப் பின் மாமன்னர் மாட்சிமைசால் சுல்தான் இப்ராஹிம் ஒப்புதல் அளித்துள்ளதன் அடிப்படையில் இந்த அறிவிப்பு செய்யப்படுவதாக முத்திரைக் காப்பாளர் மேலும் அறிவித்தார்.


