
புதிய ஹஜ் இல்லம் கட்டப்படும் என்று அறிவித்துள்ள தமிழ்நாட்டு முதல்வருக்கு மனிதநேய ஜனநாயக கட்சி-மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை நங்கநல்லூர் அருகே புனித ஹஜ் யாத்திரை செல்லும் பயணிகளின் பயன்பாட்டிற்காக, ரூபாய் 65 கோடி செலவில் புதிய ஹஜ் இல்லம் கட்டப்படும் என தமிழ்நாட்டு முதல்வர் மாண்புமிகு தளபதியார் அறிவித்திருக்கிறார்.
1446 ஹிஜ்ரி ஆண்டின் நோன்பு மாதம் தொடங்கியுள்ள இந்தப் புனித மாதத்தின் இரண்டாம் நாளில் தமிழ் மண்ணின் சமதர்ம முதல்வர் செய்துள்ள இந்த அறிவிப்பை ரமலான் பரிசாகக் கருதி மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வரவேற்கிறோம் என்று அதன் தலைவர் மு. தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

மஜக-வின் நீண்ட கால கோரிக்கை என்ற அடிப்படையில் இந்த அறிவிப்பை வெளியிட்ட மாண்புமிகு முதல்வர் திருமிகு தளபதியார் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தமிமுன் அன்சாரி மேலும் தெரிவித்துள்ளார்.


