
திங்கள்தோறும் நடைபெறும் மலேசிய சைவ நற்பணிக் கழகத்தின் தமிழ்ச் சைவ சமயச் சொற்பொழிவு எதிர்வரும் 9.3.2025 ஞாயிற்றுக் கிழமை கோலாலம்பூர், துன் சம்பந்தன் மாளிகை, தான்சிறி சோமா அரங்கில், காலை 10:00 மணி அளவில் நடைபெறவுள்ளது.
இம்முறை இந்நிகழ்ச்சியில் மலேசிய சைவ நற்பணிக் கழகத்தின் துணைத் தலைவர் திருமுறைச் செல்வி, ‘சித்தாந்த இரத்தினம்’ மு. நிர்மலாதேவி தர்மலிங்கம் எம்.ஏ. அவர்கள் சிவஆசானும் பிற ஆசான்களும் என்னும் தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார்.
கழகத்தின் செயலாளர் சிவநேயச் செல்வி அகல்யா தர்மலிங்கம் அவர்கள், ‘பாடல் பெற்ற தலங்கள்’ என்னும் தலைப்பில் மற்றொரு உரை நிகழ்த்துவார்.

அரிய சமய உண்மை, வாழ்வியல் கூறுகளை யெல்லாம் அறிவதற்கும் அவற்றை பின்பற்றுவதற்கும் எதிர்காலத் தலைமுறையினருக்குக் எடுத்துச் செல்லவும் சொல்லவும் இந்நிகழ்ச்சி வழிகோலாக அமையும் என்பதில் ஐயமில்லை!
சிந்தனைக்கும் செயலுக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கக்கூடிய இந்நிகழ்ச்சியில் தமிழ்ச் சைவ சமய ஆர்வலர்கள் தமிழர் பண்பாட்டு உடையோடும் தங்கள் குடும்பத்தினரோடும் கலந்து கொண்டு பயனடையும்படி அழைக்கப்படுகின்றனர்.
கட்டணம் ஏதுமின்றி நடத்தப்பெறும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அன்பர்களுக்கு மதிய உணவும் வழங்கப்படும். கூடுதல் தெரிவலுக்கு 0123277061 அல்லது 0122340470 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். மின்னஞ்சல் தொடர்புக்கு darmamsnk@yahoo.com.


