
இந்த உலகம் தொழில்நுட்பத்தை நோக்கி மாறிக் கொண்டிருக்கும் நிலையில் உலகில் ஒரு பெண் தன்னை பல்வேறு வழிகளில் வளர்த்துக்கொண்டு பீடுநடை போட்டு வருவது கண்டு மகிழ்ச்சியடைவதாக மஇகா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கூறினார்.
பெண்களுக்கு நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் அவசியம்.எந்த
சூழ்நிலையிலும் ஒரு பெண் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். தன் திறமைகளை முழுமை-யாக அறிந்து, வெளிப்படுத்தும் பெண்ணே வெற்றி பெற முடியும் என்று மகளிர் தின வாழ்த்து செய்தியில் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பெண்கள் பொருளாதார சுய நிலைத் தன்மை, தனிப்பட்ட தேவைக்கும், குடும்பத்திற்கும், ஒருவேளை சமூகத்-திற்கும்கூட உதவ பொருளாதார நிலையில் வலுவாக இருக்க வேண்டும்.
வேலைவாய்ப்புள, தொழில்முனைவு, முதலீடு ஆகியவற்றில் பெண்கள் கவனம் செலுத்த வேண்டும்.
பெண்கள் கற்றல் விவகாரத்தில் ஓய்ந்துவிடக்கூடாது.
அறிவை வளர்த்துக் கொள்ள தொடர்ந்து கற்றுக்கொள்வதே ஒரு பெண்ணின் முதன்மையான கடமை. பெண்களுக்கு எதிலும் சுயமேம்பாடு தேவை என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சொன்னார்.
தற்போதைய சூழலில் பெண்கள் சமூகத்தில் உரிய இடம் பெற்று வருகின்றனர்.
பெண்கள் சமூக சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிமைக்காக குரல் எழுப்புகின்றனர்.
குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் ஆதரவாக இருந்து வரும் பெண்களை மகளிர் தினத்தில் மட்டுமன்றி எல்லா காலத்திலும் போற்ற வேண்டும்.
உலகளவில் மார்ச் 8ஆம் தேதி அனைத்துலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
மகளிர் தினத்தை உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும் கொண்டாட அனைத்து பெண்களுக்கும் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் மகளிர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.


