Thursday, April 16, 2026

உலக மகளிர் தினத்தில்100 பெண்களுக்கு இளஞ்சிவப்பு வண்ண ஆட்டோ: முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் 100 மகளிருக்கு இளஞ்சிவப்பு ஆட்டோக்களை தமிழ் நாட்டு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

தவிர, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சார்பில் சுய உதவிக் குழு மகளிருக்கு 50 மின் ஆட்டோக்கள், தொழிலாளர் நலத் துறை சார்பில் மகளிருக்கு 100 ஆட்டோக்கள், உட்பட மகளிருக்கு 250 ஆட்டோக்களை வழங்கியதுடன், மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கியும் வைத்ததார்.

மேலும், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கையாள பெண் காவல் ஆய்வாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியை தொடக்கிவைத்து உரை ஆற்றினார்.

சுய உதவிக் குழு மகளிர் உறுப்பினர்களுக்கு வங்கிக் கடன் வசதி, நலத் திட்ட உதவிகள், ஔவையார் விருது, பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருது-2025, மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருது-2025 ஆகியவையும் வழங்கப்பட்டன.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை