Friday, May 1, 2026

தலைநகரத்து நேதாஜி அரங்கில் ‘வாழ்க்கை எனும் ஓடம்’ நூல் வெளியீடு

மலேசியத் தமிழ் இலக்கியப் பூங்காவில் இன்னோர் இலக்கிய மலர் மலர்ந்து மனம் வீசக் காத்திருக்கிறது.

வாழ்க்கை எனும் ஓடம் என்னும் பெயரில் விலாயா மணியம் என்னும் நல்லார் இயற்றியுள்ள நூல்தான் அந்த இலக்கிய மலர்.

தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரும் சுப்பிரமணியன் நாகமுத்து என்னும் இயற்பெயரைக் கொண்டவருமான விலாயா மணியம், கிள்ளான் பள்ளத்தாக்கு வட்டாரத்து இலக்கிய வட்டத்தில் நன்கு அறிமுகமானவர்.

சமூக நோக்கும் தமிழியப் பார்வையும் மிகுந்துள்ள விலாயா மணியம், தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தில் குறிப்பாக பள்ளி சார்ந்த பயணத்தில் தான்பெற்ற பட்டறிவு, எதிர்கொண்ட சவால்கள்-சம்பவங்கள், குறிப்பாக மாணவ சமுதாயத்தைப் பற்றிய பார்வை, அவர்களுக்கான நல்லுரை ஆகியன குறித்த கருத்துகளை எல்லாம் பொதியவைத்து வாழ்க்கை என்னும் ஓடம் என்னும் இந்த நூலை இயற்றியுள்ளார்.

மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வண்ணம் உருவாகியுள்ள இந்த நூல் இம்மாதம் வருகின்ற 23ஆம் நாள் தலைநகரம் ஈப்போ சாலை-Jalan Sultan Azlan Shah-வை ஒட்டி அமைந்துள்ள ம.இ.கா. தேசிய தலைமையகத்து நேதாஜி அரங்கில் பிற்பகல் 2:00 மணி அளவில் வெளியீடு காண இருக்கிறது.

எய்ம்ஸ்ட் பல்கலைக்கழக இணைவேந்தரும் மலேசியத் தமிழ் இலக்கிய வட்டத்து சொல்வேந்தருமான டத்தோஸ்ரீ டாக்டர் மு. சரவணன் தலைமையில் இந்த நூல் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து சிறப்பித்து நூல் வெளியீட்டிற்கு ஆதரவு நல்கும்படி நூல் ஆசிரியர் விலாயா மணியம் கேட்டுக் கொள்கிறார். குமரியும் அதை வழிமொழிகிறாள்!

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை