Monday, April 20, 2026

கத்தார் டோகாவில் மஜக நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் தமிழ் முழக்கம்!

தமிழ்நாட்டு மனிதநேய ஜனநாயகக் கட்சி-மஜக சார்பில் கத்தாரில் நடைபெற்ற நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் ‘தமிழ் வாழ்க’, ‘தமிழ்நாடு வெல்க’ என்ற முழக்கங்கள் ஓங்கி ஒலித்தன

கத்தார் தலைநகர் டோஹாவில் மஜக கத்தார் கிளை சார்பில், சமூக நல்லிணக்கத்தை வலிமைப்படுத்தும் வகையில் இஃப்தார் என்னும் நோன்பு துறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .

இதில் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட அனைத்து சமூகத்தினரும் பல்வேறு கொள்கையினரும் வருகை தந்து ஒன்றுகூடியது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

சாதி மதம் கடந்தோரும் சுயமரியாதை உணர்வாளர்களும் வருகைதந்து தங்களுடைய மனிதநேய உறவை வலுப்படுத்தும் வகையில் சிறப்பித்தனர்.

நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கத்திற்கு சமூக ஒற்றுமையை நினைவுகூரும் வகையில் ‘அண்ணல் காந்தியடிகள்’ என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நோன்பு துறப்புக்கு முந்தைய முதல் அமர்வில் இரண்டு நாட்களுக்கு முன்பாக போர் நிறுத்த விதிகளை மீறி -இஸ்ரேலிய பயங்கரவாத தாக்குதலால் கொல்லப்பட்ட காசா தியாகிகளுக்கு அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மௌன மரியாதை செலுத்தினர். இரண்டாவது அமர்வில் ஆசிரியை வாசுகி உரையாற்றினார். தொடர்ந்து மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில், நிறைவாக அனைவரும் எழுந்து நின்று ‘தமிழ் வாழ்க’- ‘தமிழ்நாடு வெல்க’ என்றெல்லாம் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர்.

இந்த முத்தாய்ப்பான நிகழ்ச்சி, அங்கு திரண்டிருந்த அனைவரையும் உணர்ச்சிவசப்படுத்தியது, குறிப்பிடத்தக்கது.

தகவல்: மஜக தொழில்நுட்ப அணிதோகா –
கத்தார் மண்டலம்

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை