
கோலாலம்பூர் ஏப்ரல் 25-
‘மலாயா கணபதி’; இது வெறும் பெயர் மட்டும் அல்ல. மலேசிய வரலாற்றில் மறக்கவும் மறுக்கவும் முடியாத வரலாற்று நாயகனின் பேரடையாளம்.
தொழிலாளர் வர்க்கத்தின் உரிமையை நிலைநிறுத்திய முகவரி; அன்றைய மலாயா மண்ணின் விடுதலைக்காக உரக்க முழங்கிய மாவீரன்.
தமிழினத்தின் அடையாளமாகவும் பெருமையாகவும் போற்றப்பட வேண்டிய தொழிற்சங்கவாதி.
இத்தகையப் பெருமைக்குரிய அவரை, நம்மில் எத்தனைப் பேர் அறிந்து வைத்திருக்கிறோம்?
நம் வரலாற்றைப் பேசுவதும் அறிந்து வைத்திருப்பதும் நம் கடமைதானே?
நம் அடுத்த தலைமுறைக்கு அதனை அறிய வைப்பதும் அவர்களிடையே கொண்டு சேர்க்க வேண்டியதும் நம் கடமைதானே?
இம்மண்ணில் தொழிலாளர் உரிமைகள் நிலைத்திருக்கவும் தொடர்ந்து முன்னெடுக்கவும் விதைகளாய் ஆனவர்களை நாம் போற்றி மதிக்கத்தானே வேண்டும்!.

அவ்வகையில், தமிழர் எண்ணங்களில் மட்டுமின்றி, உழைக்கும் வர்க்கத்தினர் ஒவ்வொருவரின் எண்ணத்திலும் நீங்காத மனிதர்களாக-தலைவர்களாக மலாயா கணபதியும் அவரோடு களத்தில் நின்ற பி.வீரசேனன், சாம்பசிவம் என எண்ணிலடங்கா தொழிற்சங்வாதிகளை நினைவுக்கூர்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
அவர்களை நினைவில் நிலை நிறுத்தவும் இன்றைய தலைமுறையினருடன் அடுத்த தலைமுறைக்கும் இந்த வரலாற்றைக் கொண்டுச் சேர்க்கவும் கீழ்கண்டவாறு நடைபெறும் நூல் அறிமுக விழாவிற்கு தங்களின் வருகை நனிச் சிறப்பானதாகும்.
இவ்வேளையில், கோலாலம்பூர் பிரிக் ஃபீல்ட்ஸ் பார்வையற்றோர் சங்க மண்டபத்தில் (MAB HALL, BRICkFIELDS), வரும் மே மாதம் நான்காம் நாள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:30 மணி அளவில் நடைபெற உள்ள இந்நூல் அறிமுக நிகழ்விற்கு தங்களை அழைப்பதில் அகம் மகிழ்கிறோம் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சி தொடர்பில் மேல் விவரத்திற்கு: 016-5684302 (சிவாலெனின்)
&
016-543 2572
(தோழர் யோகி)


