Saturday, April 18, 2026

நம் சமுதாயம் எங்கே போகிறது? -தான்ஸ்ரீ குமரன் ஆதங்கம்

கோலாலம்பூர், எப்ரல் 30:
அண்மையில் வெளிவந்த 2024 ஐந்தாம் படிவத் தேர்வு தேர்வு முடிவின்வழி, தமிழ் மாணவர்கள் அதிக ‘ஏ’-க்கள் பெற்ற செய்தியை படித்து மகிழ்ந்திருக்கும் வேளையில், நம்மவர்கள் ஒரு கோடி வெள்ளி போதைப் பொருள் கடத்தலுக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட செய்தியும் கொலைக் குற்றத்திற்காக சிறை செல்லும் செய்தியும் பெரும் தலைக் குனிவை ஏற்படுத்தி இருப்பதாக தான்ஸ்ரீ இன்று வேதனையுடன் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், மக்கள் தொகையில் இந்திய சமுதாயம் பன்னிரண்டு விழுக்காடாக இருந்த காலம் முதல் இதுவரை, நம் மக்களின் சமய, சமுதாய நலன் பேண, அகில மலாயா தமிழர் சங்கம், அகில மலாயா திராவிடர் கழகம், தமிழர், பொங்கல் திருநாள்கள், தமிழ் இளைஞர் மணி மன்றம், தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம், இந்து இளைஞர் இயக்கம், இந்து சங்கம், இந்து தர்ம மாமன்றம், சைவ சமயப் பேரவை, நால்வர் மன்றம், ஓம்ஸ் அறவாரியம், மாந்த நேய திராவிடர் கழகம், தமிழர் தன்மானப் பேரவை, கோலாலம்பூர் மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானம், ஆலயங்களின் ஒருங்கிணைப்புப் பேரவை, போன்ற நூற்றுக்கணக்கான சமூக சமய அமைப்புகள் மில்லியன் கணக்கான ரிங்கிட் செலவழித்து சமுதாயம் நலன்பேண மாதந்தோறும் பல சமூக நிகழ்ச்சிகளையும் (கல்வி உட்பட) சமய விழாக்களையும் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், போதைப் பழக்கத்திலும், போதைப் பொருள் கடத்தலிலும், கொலை, கொள்ளையிலும் ஈடுபட்டு தூக்கிலிடப்படுவதும் சிறைச் செல்வதும் தமக்கு பெரும் மனக்கவலையை ஏற்படுதுவதாக சுகாதாரத்துறை மேனாள் துணை அமைச்சருமான தன் ஸ்ரீ குமரன் குறிப்பிட்டுள்ளார் .

மலேசிய மக்கள் தொகையில் 6.5 விழுக்காடாக குறைந்த்ருக்கும் தற்போதைய நிலையில், சமுதாயத்தின் கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு, வீட்டுவசதி போன்ற தேவைகளுக்காக அரசியல்வழியாகவும் சமூக அமைப்புகளின் வழியும் நாம் தொடர்ந்து போராடிக் கொண்டிருகும் வேளையில், தங்களை அழித்துக்கொண்டு குடும்பத்தினர்க்கும் தலைக்குனிவை ஏற்படுத்தும் இத்தகைய குற்றவாளிகளின் செயல்களுக்கான காரணங்களை கண்டறிந்து அவர்களை நேர்வழிப் படுத்த அரசாங்கத்துடன் இணைந்து அரசியல், சமூக, சமய இயக்கங்கள் முன்வரவேண்டும் என்றும் தான்ஸ்ரீ குமரன் கேட்டுக்கொண்டு உள்ளார்.

தவிர, காவல் துறையிலிருந்து ஓய்வுபெற்ற மூத்த ஆணையர்களான டத்தோஸ்ரீ ஆ.தெய்வீகன், டத்தோ தா. ஞானசேகரன் போன்றவர்களின் ஆலோசனைகளை நாடி உடடியாக ஆவன செய்யும்படி அரசியல், சமய, சமுதாயத் தலைவர்வர்களை தான்ஸ்ரீ குமரன் கேட்டுக்கொண்டார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை