81 வயதை எட்டியவருக்கு 73 வயதைத் தொட்டவர் வாழ்த்து!!
தமிழ்நாட்டில் வெவ்வேறு துறைசார்ந்து பயணிக்கும் இரு ஆளுமையர், ஒரு வகையில் மட்டும் ஒன்றானவர்கள்; இணை பிரியாதவர்கள்.
அதேவேளை அரசியல் சமூக பொருளாதார தலங்கள் சார்ந்தும் தமிழ்நாட்டு மக்கள் நலம் கருதி சிந்திப்பதிலும் நன்றானவர்கள்!
ஏறக்குறைய இருவருக்கும் ஒத்த சிந்தனை இருந்தாலும் ஒருவர் நேரடி அரசியலிலும் மாநில ஆட்சி நிர்வாகத்திலும் ஈடுபட்டிருக்க, இன்னொருவர் பத்திரிகைத் துறையில் நீண்ட அனுபவமும் பாரம்பரியமும் வாய்த்த மூத்த செய்தியாளர்
இவ்விருவரில் முதலாமவரான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கடந்த மார்ச் திங்கள் முதல் நாளில் 73 வயதைத் தொட்ட நிலையில், இன்று மேத்திங்கள் நான்காம் நாள் உற்ற நண்பர் என். ராம் எண்பத்தொன்றாவது வயதை எட்டிய நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.
நடைப்பயிற்சிக்கு செல்லும் பொழுதெல்லாம் பெரும்பாலான வேளைகளில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்ற நண்பராகவும் தேசிய – தமிழ்நாட்டு அரசியல் குறித்தெல்லாம் உற்ற நேரத்தில் உரிய ஆலோசனை வழங்குபவராகவும் உள்ளத்தே உள்ளதை தெள்ளென எடுத்துக் கூறி நடைப்பயிற்சி களைப்பை நீக்கும் நண்பருமான இந்து என். ராமிற்கு இன்று 80ஆவது பிறந்த நாள்!
அவருக்கு தமிழ்நாட்டு முதலமைச்சர், திராவிட முன்னேற்றக் கழக தலைவர், திராவிட மாடல் ஆட்சியாளர், இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கெல்லாம் வழிகாட்டும் மாநிலத்தை ஆள்பவர், தமிழக சட்டமன்றத்திலேயே மிக அதிக உறுப்பினர்களை கொண்ட எதிர்க்கட்சித் தலைவராக கடந்த சட்டமன்றத்தில் திகழ்ந்தவர் என்ற பெருமைக்கு எல்லாம் உரிய முக ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருப்பதற்கு, ராம் நன்றி தெரிவித்து இருக்கிறார்.
சென்னையில் இந்துக் குழுமத்தை நிர்வகிக்கின்ற கஸ்தூரி குடும்பத்தின் முக்கிய உறுப்பினரான என் ராம், இரு வாரம் ஒரு முறை வெளிவரும் பருவ ஆங்கில இதழான ‘பிரண்ட் லைன்’ ஆசிரியரும் ஆவார்.
என். ராமிற்கு குமரியும் வாழ்த்து தெரிவிக்கிறாள்.!!


