Wednesday, April 15, 2026

சிங்கையில் தமிழ்ப் புத்தகத் திருவிழா!ஜெயபக்தி நிறுவனத்தின் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன!

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்க் கழக ஏற்பாட்டில் சிங்கப்பூர் விக்டோரியா பிளாசாவில் நேற்று மே 09 தொடங்கிய தமிழ்ப் புத்தக திருவிழா மிகப்பெரிய அளவில் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது.

சிங்கப்பூர் சட்ட- உள்துறை அமைச்சர் கா.சண்முகம் நேற்றைய தொடக்க விழாவிற்கு சிறப்பு வருகை தந்து தமிழ்ப் புத்தக திருவிழாவை அதிகாரப்படியாக தொடக்கி வைத்தார்.

மலேசியத் திருநாட்டில் மிகவும் புகழ்பெற்ற குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் புத்தகங்களும் இந்தப் புத்தகத் திருவிழாவில் இடம் பெற்றுள்ளன.

பிரபல எழுத்தாளர்களின் சிறுகதைகள், நாவல்கள், வரலாற்று நாயகர்களின் படைப்புகள், தமிழ் அகராதி உட்பட திருக்குறள் போன்றவை இங்கு விற்பனையில் உள்ளன.

குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு செல்வராஜ் , பெரும் முயற்சி மேற்கொண்டு மலேசியாவில் இருந்து புத்தகங்களை சிங் கைக்கு அனுப்பி வைத்து சிங்கை தமிழ் மக்களும் தமிழ் புத்தகங்களை வாங்க ஏற்பாடு செய்துள்ளார்.

டத்தோ டாக்டர் கு செல்வராஜ் மேற்கொண்டு வரும் தமிழ்ப் பணியை தமிழ் இலக்கிய உலகம் பாராட்ட வேண்டும்

குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு. செல்வராஜ் அவர்களின் புதல்வி பார்கவி திருக்குறள் புத்தகத்தை அமைச்சர் சண்முகத்திடம் வழங்கியபோது அவர் உற்சாகத்துடன் பெற்றுக் கொண்டார்.

சிங்கப்பூர் எழுத்தாளர் நா.ஆண்டியப்பன் ஏற்பாட்டில் இந்த புத்தகத் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை