
கோலாலம்பூர் மே 20-
உலக வாணிப மையத்தில் வரும் 23(மே) முதல் ஜூன் 1ஆம் நாள்வரை 42 ஆம் ஆண்டு பன்னாட்டு புத்தகக் கண்காட்சி விழா மிகப்பெரிய அளவில் நடைபெற இருக்கிறது.
இந்தப் புத்தகக் கண்காட்சி விழாவில் குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் புத்தகங்கள் இடம் பெறுவதாக அந்நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு. செல்வராஜ் தெரிவித்தார்.
தொடர்ந்து 42 ஆவது ஆண்டாக நடைபெறும் இந்தப் புத்தக கண்காட்சி விழாவில் குயில் ஜெயபக்தி பங்கேற்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று அவர் சொன்னார்.
இம்முறை 258 நூல் நிறுவனங்களின் புத்தகங்கள் கண்காட்சியில் இடம் பெறுகின்றன. மேலும் 1,200 புத்தக முகப்பிடங்கள் அமைக்கப்படுகின்றன.
இதில் இடம்பெறும் ஒரேத் தமிழ்ப் புத்தகக நிறுவனம் குயில் ஜெயபக்தி மட்டுமே என்று அவர் சொன்னார்.

ஆரம்பப் பள்ளி முதல் இடைநிலைப் பள்ளி வரை பயிலும் மாணவர்களுக்கு உரிய பாடப்புத்தகங்கள் இந்த கண்காட்சியில் இடம் பெறுகின்றன.
மலேசியா மற்றும் தமிழ் நாட்டு எழுத்தாளர்களின் படைப்புகள், நாவல்கள், சிறுகதைகள் , தன்முனைப்பு படைப்புகள், கவிதை நூல்கள் இந்தப் புத்தகக் கண்காட்சியில் இடம் பெறுவதால் பொதுமக்கள் தங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை ஒரே இடத்தில் வாங்கி கொள்ளலாம்.
மும்மொழி அகாராதி, திருக்குறள், வரலாற்று நாவல்கள் இங்கு விற்பனையில் இருக்கும் என்றும் அவர் சொன்னார்.
அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற தமிழ்ப் புத்தகக் கண்காட்சியில் குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் புத்தகங்கள் இடம் பெற்றன.
சிங்கப்பூர் தமிழர்கள் அதிக அளவில் புத்தக கண்காட்சிக்கு வருகை தந்து புத்தகங்களை வாங்கி சென்றது பெரும் மகிழ்ச்சியை அளித்தது.
அதேபோல் புத்ரா உலக வாணிப மையத்தில் பத்து தினங்களுக்கு நடைபெற உள்ள இந்த பன்னாட்டு புத்தக விழாவில் அதிகமான மலேசிய இந்தியர்களின் வருகையை எதிர்பார்க்கிறோம் என்று இதன் தொடர்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
இந்த புத்தகக் கண்காட்சியில் இடம்பெறும் குயில் ஜெயபக்தி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள முனையத்தின் என் 10.


