Thursday, April 2, 2026

மலேசிய சைவ நற்பணிக்கழகச் சொற்பொழிவு

‘திருமுறைச் செம்மல்’ ந தர்மலிங்கம்

மலேசிய சைவ நற்பணிக் கழகத்தின் சார்பில் திங்கள்தோறும் நடைபெறும் தமிழ்ச் சைவ சமயச் சொற்பொழிவு எதிர்வரும் 1.6.2025 ஞாயிற்றுக் கிழமை கோலாலம்பூர், துன் சம்பந்தன் மாளிகை, தான்ஸ்ரீ சோமா அரங்கில், காலை மணி 10.00 அளவில் நடைபெறவுள்ளது.

இம்முறை இந்நிகழ்ச்சியில் மலேசிய சைவ நற்பணிக் கழகத்தின் தலைவர் திருமுறைச் செம்மல் சித்தாந்த இரத்தினம் முனைவர் தர்மலிங்கம் நடராசன், ‘திருநாவுக்கரசரின் திருத்தாண்டகம்’ என்னும் தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார்.

பாவேந்தன் பெரியண்ணன்

கழகத்தின் செயலவை உறுப்பினர் சிவநேயச் செல்வர் பாவேந்தன் பெரியண்ணன், ‘திருநீற்றின் சிறப்பு’ என்னும் தலைப்பில் உரை நிகழ்த்துவார். அரிய சமய உண்மைகளையும் வாழ்வியல் கூறுகளையும் அறிவதற்கும் அதனைப் பின்பற்றுவதற்கும் அவற்றை எதிர்காலத் தலைமுறையினருக்கு கொண்டு செல்லவும் இந்நிகழ்ச்சி வழிகோலாக் அமையும் என்பது திண்ணம்.

சமய சிந்தனைக்கும் ஆன்மிக நன்னெறிச் செயலுக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கக்கூடிய இந்நிகழ்ச்சியில் தமிழ்ச் சைவ சமய ஆர்வலர்கள் தமிழர் பண்பாட்டு உடையில் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு பயன் அடைய அழைக்கப்படுகிறார்கள்.

கட்டணமின்றி நடத்தப்பெறும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அன்பர்களுக்கு மதிய உணவும் வழங்கப்படும். கூடுதல் தெரிவலுக்கு 0123277061 அல்லது 0122340470 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். மின்னஞ்சல் தொடர்புக்கு darmamsnk@yahoo.com.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை