
கோலாலம்பூர் மே 28-
உலக வாணிப மையத்தில் மே 23 ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் வரை 42 ஆம் ஆண்டு பன்னாட்டு புத்தகக் கண்காட்சி விழா மிகப்பெரிய அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்தப் புத்தகக் கண்காட்சி விழாவில் குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் புத்தகங்கள் விற்பனைக்கு இடம் பெற்றுள்ளன என்று அந்நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு. செல்வராஜ் தெரிவித்தார்.
தொடர்ந்து 42 ஆவது ஆண்டாக நடைபெறும் இந்தப் புத்தக கண்காட்சி விழாவில் குயில் ஜெயபக்தி பங்கேற்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.

டேவான் மெர்டேக்கா அருகில் அமைக்கப்பட்டுள்ள குளிர்சாதன கூடாரத்தில் குயில் ஜெயபக்தி புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இம்முறை 258 நூல் நிறுவனங்களின் புத்தகங்கள் கண்காட்சியில் இடம் பெறுகின்றன. மேலும் 1,200 புத்தக முகப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் இடம்பெறும் ஒரேத் தமிழ்ப் புத்தகக நிறுவனம் குயில் ஜெயபக்தி மட்டுமே என்று அவர் சொன்னார்.
மாணவர்களுக்கான தேர்வு புத்தகங்கள்,
கதை கட்டுரைகள், கவிதைகள் சிறுகதைகள், நாவல்கள் வரலாற்று நூல்கள் அனைத்தையும் இங்கு வாங்கி கொள்ளலாம் என்று அவர் சொன்னார்.
தகவல்:
செ. வே. முத்தமிழ் மன்னன்
தலைவர், மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கம்


