Monday, April 20, 2026

அடுத்த தவணையும் திராவிட மாடல் ஆட்சியைத் தொடர்வார் ஸ்டாலின்: -ரியாத் தொழிலதிபர் சிங்கம் பஷீர்

அரசியல் வித்தகர் கலைஞர் மு. கருணாநிதியின் 101-ஆவது பிறந்த நாள் நெருங்குகிற இந்த நேரத்தில், மெரினா கடற்கரையில் அமைந்துள்ளஅவரின் நினைவிடம் நோக்கி, அவரை நெஞ்சில் நிலைநிறுத்துகின்ற இந்த நேரத்தில், அவர் வாழ்ந்த காலத்தில் திமுக-விற்குக் கிடைக்காத அருஞ்சிறப்பை, அவரின் அருமை அரசியல் வாரிசான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நிலைநாட்ட இருக்கிறார்.

திமுக, தொடர்ந்து இரு தவணைகள் ஆட்சியில் தொடர்ந்ததில்லை என்ற குறையை நேர்செய்யும் விதமாக, அடுத்தாண்டு நடைபெற இருக்கின்ற தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான பொற்கால திராவிட மாடல் ஆட்சியை ஸ்டாலின் தொடர்வார் என்று ரியாத் தொழிலதிபர் சிங்கம் பஷீர் தெரிவித்தார்.

கோலாலம்பூர் வட்டாரத்தில் பிரபலமாக செயல்படுகின்ற ஏபிசி உணவகங்களின் உரிமையாளர் டத்தோ ஹக்கிம் இல்ல திருமணத்திற்கு சௌதி அரேபியாவில் இருந்து வருகை தந்த சிங்கம் பஷீர், தமிழ்நாடு இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்.

தற்போது சௌதிஅரேபியத் தலைநகரம் ரியாத்தில் பிரபல வர்த்த்கராக விளங்கும் சிங்கம் பஷீர், தன்னுடைய நண்பரும் வர்த்தக சகாவுமான ஹக்கீம் வீட்டு திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அண்மையில் கோலாலம்பூருக்கு வந்தார்.

பல இன மக்கள் ஒன்றாக வாழும் தன்மை, நிலையான அரசாங்கம் போன்றவற்றிற்கு பெயர் பெற்ற மலேசியாவில் ஆசியான் அமைப்பின் 46-ஆவது கூட்டம் சீர்மிக நடைபெற்றவதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி தெரிவித்தார் சிங்கம் பஷீர்.

எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, சாதாரண கல்வியுடன் வர்த்தக நோக்குடன் அயலகத்திற்கு புலம்பெயர்ந்த இவர், இப்பொழுது பெரும் வர்த்தக புள்ளியாக அதுவும் வெளிநாட்டில் விளங்கும் சிங்கம்பசீர் இயல்பாகவே திமுக பாரம்பரியத்தை சேர்ந்தவர்.

தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டம், பெரிய பட்டினத்தை சேர்த்த சிங்கம் பஷீர், எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் வர்த்தக தாக்கம் சிறுவயதிலிருந்தே அவரின் உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்ததால், எப்படியும் தொழில் செய்தாக வேண்டும் என்ற உந்துதலில் 38 ஆண்டுகளுக்கு முன்பு சவூதி அரேபியாவிற்கு சென்றார்.

வர்த்தகம் தொடர்பாக வளைகுடா நாட்டில் தொடர்ந்து அங்கேயே வாழ நேரிட்டாலும் திராவிட சித்தாந்தத்தில் திளைத்த அவர்தம் குடும்ப தொடர்பை நிலைநிறுத்தும் வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் விளங்குகிறார் சிங்கம் பஷீர்.

இடையில் 2005 ஆம் ஆண்டில் நடிகர் விஜயகாந்த் தேமுதிக என்னும் அரசியல் கட்சியைத் தொடங்கிய பொழுது, அவருடன் இருந்த தனிப்பட்ட நட்பின் காரணமாக அந்தக் கட்சியில் இணைந்தார் சிங்கம் பஷீர்.

அரசியல்வாதியாக உருமாறிய நடிகர் விஜயகாந்துடன் சில காலம் இணைந்து பயணித்த சிங்கம் பஷீர், இயல்பாகவே திராவிட தாக்கம் கொண்ட குடும்பத்தை சார்ந்தவர் என்பதால் மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு திரும்பினார்.

வளைகுடா நாட்டில் வாழ்ந்தாலும் தமிழ்நாட்டு அமைச்சரவை உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள், மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் தொடர்பில் இருக்கும் சிங்கம் பஷீருக்கு, சிவகங்கை சீமையைச் சேர்ந்த அமைச்சர் இராஜ கண்ணப்பன் போன்றோருடன் நெருங்கிய தொடர்பிருக்கிறது.

குறிப்பாக இன்றைய நெருக்கடியான சூழலில் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் தமிழ்நாட்டு அரசாங்கத்தையும் ஒன்றாகக் கட்டிக் காத்துவரும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மீது மிகுந்த பற்று கொண்டவரான சிங்கம் பஷீர், சௌதியில் மட்டுமல்ல; தமிழ்நாட்டில், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த திமுகவினர் ஏற்பாடு செய்யும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அவற்றை சிறப்பாக ஏற்பாடு செய்யும்படி, சிறப்பாக ஏற்பாடு செய்யும்படி பல்லாயிரக்கணக்கான நிதியை சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்களுக்கு அனுப்பி வைப்பார்.

இதைப்போல சமய அளவில் இஸ்லாத்தில் குறிப்பாக நோன்பு மாதமான ரமலான் மாதத்தில் ஏழை எளிய மக்களுக்கு சவுதி அரேபியாவில் இருந்தபடியே நலிந்த குடும்பங்களை அடையாளம் கண்டு தனித்தனியாக நிதி உதவியும் பொருளும் கொடுத்து உதவி செய்பவர் சிங்கம் பஷீர். முஸ்லிம் குடும்பங்கள் தவிர, மற்ற சமயங்களைச் சேர்ந்த நலிந்த குடும்பங்களுக்கும் நோன்பு மாதத்தில் உதவி செய்வதாகத் தெரிவிக்கிரார் சிங்கம் பஷீர்.

ஏக இறைவன் வகுத்துள்ளபடி ஸக்காத் என்ற பெயரில் நோன்பு மாதத்தில் நன்கொடை அளிக்கப்படும் ஒவ்வொரு சமயத்திலும் தன்னுடைய உள்ளம் அடையும் இன்பத்திற்கு எல்லை இல்லை என்று தெரிவிக்கிறார், இவர்.

திமுகவில் சாதாரண உறுப்பினர்கள் முதல் உயர் மட்டத் தலைவர்கள் வரை நெருங்கிய தொடர்பில் சிங்கம் பஷீர், குறுகிய குறுகிய கால வருகை மேற்கொண்டு கோலாலம்பூருக்கு வந்திருந்த சமயத்தில் தமிழ் ஊடகத்தினரையும் சந்தித்தார்.

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலிலும் திராவிட முன்னேற்றக் கழகம் தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் தளபதி மு க ஸ்டாலின்தான் மீண்டும் முதல்வர் என்றும் அப்போது உறுதிபடச் சொன்னார்.

பஷீர் குடும்ப நண்பர் ஜெகன்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை