
‘மக்கள் நல சேவகர்’ என்னும் உயரிய விருதினை , தமிழ் நாட்டின் சிறந்த நல்நெஞ்சரும் சமூக சேவகருமான ஈகை டாக்டர் கருணாகரனுக்கு,
டெலி ஸ்டார் எஸ்.பி.மணிவாசகம் சிறப்பு வரவேற்பு விழாவினை தலைநகரில் ஏற்பாடு செய்திருந்தார்.
விழாவிற்கு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் மலேசியக் கிளைத் தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கி , டாக்டர் கருணாகரனுக்கு பாராட்டுரை நிகழ்த்தி இவ்விருதினை வழங்கி சிறப்பித்தார்.
டான்ஸ்ரீ சோமா அரங்கில் அரங்கம் நிறைந்த கூட்டத்தினரோடு நடைபெற்ற இவ்விழாவிறனை எஸ்.பி. மணிவாசகம் ஏற்பாடு செய்திருந்தார். கவிஞர் சீராகி விழாவை சிறப்பாக வழிநடத்தினார். (மலேசிய இந்திய சமுதாய மேம்பாட்டு இயக்கத்தின் (மிக்காஸ்) சோலை பாஸ்கரன் அனைவரையும் வரவேற்றார். முத்தமிழ்ச்சங்க துணைத் தலைவர் எட்வர்ட் ஞானசேகரன் மற்றும் கலைஞர் கோடீஸ்வரி சிறப்புரை நிகழ்த்தினர்.

கலை நெஞ்சர் டத்தோ முத்துரத்தினம், டாக்டர் ரம்சே , நம்மவர் கூட்டுறவுச் செயலாளர் சுப்பையா சுப்பிரமணியம்,
மஇகா சிலாங்கூர் மாநில கலை கலாச்சார பிரிவுத் தலைவர் விஜய் ஆனந்த், கலைஞர் எம் ஜி ஆர் விஜயசேகர், மேடை நாடக ஆசிரியர் ஶ்ரீதரன், கவிஞர் A.R.சுப்ரமணியம்,
மலேசியத் தமிழர் கலைமன்றத் தலைவர் டாக்டர் ஜேம்ஸ் காளிமுத்து, சிலாங்கூர் கூட்டரசு தமிழ் எழுத்தாளர் வாசக இயக்கத் தலைவர் மதியழகன், கருணைக் கரங்கள் தலைவர் சுப்ரமணியம், தொழிலதிபர் சங்கர் நாயுடு , பத்திரிக்கையாளர் ராமதாஸ் மனோகரன் , எம். கே.யு(MKU) எஸ்.பி. பிரபா , புகைப்படக் கலைஞர் மலையாண்டி , சமூக ஆர்வலர் லோகநாதன் மற்றும் சமூக இயக்கங்களின் பிரதிநிதிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தமிழக நக்கீரர்
தமிழ்ச்சங்கத் தலைவர் மீடியா பாஸ்கர் சிறப்புரையாற்றினார்

ஏற்புரையில் டாக்டர் கருணாகரன், இவ்விருது வெளிநாடான மலேசியாவில் கிடைக்கப் பெற்ற மிகப் பெரிய அங்கீகாரம் என்பதோடு மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது இன்று குறிப்பிட்டார்.
இதற்காக தன் குடும்பத்தின் சார்பில் நன்றி தெரிவித்தார்.
தகவல்: எஸ்.பி. மணி வாசகம்


