
நாடறிந்த கலைஞர் மனோமணியனின் மறைவு மலேசிய இந்திய சமூகத்திற்கு பீடி செய்ய முடியாத இழப்பாகும் என்று மனம் கலங்குகிறார் தான்ஶ்ரீ க.குமரன்
மனோகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இந்தக் கலைஞர், நாட்டின் சிறந்த தமிழ்த் தொண்டர்களில் ஒருவராக வலம் வந்த முத்தமிழ் தொண்டர்.
மு.சு.மணியனின் மூத்த மகனாவார் மனோகரன். மலேசியக் கலையுலகில் தனக்கென ஒரு சிறப்பிடத்துடன் வலம்வந்த மனோமணியனை அண்மையில் சந்தித்து பேசியபோது அவர் நலமுடனிருந்தார் என்று குறிப்பிட்ட தான்ஶ்ரீ குமரன், அவரையும் அவரின் குடும்பத்தினரையும் 1957-ஆம் ஆண்டிலிருந்து தான் நன்கு அறிந்ததாக குறிப்பிட்ட குமரன், மனோமணியனுக்கு மனோமணியன் பன்னிரண்டு வயதை எட்டிய காலத்திலிருந்தே அவர்கள் தமக்கு அறிமுகமானவர்கள் என்றும் எங்கு பார்த்தாலும் அண்ணன் என்று அன்பொழுக பேசுவார் என்றும் குறிப்பிட்டார்.

அகில மலாயா தமிழர் சங்கம், தமிழர் திருநாள் என்றெல்லாம் சமூக பாங்குடன் செயல்பட்ட அவரின் தந்தை முத்தமிழ்த் தொண்டர் மு.சு.மணியனுடன் 1957-ஆம் ஆண்டிலிருந்து அவர் இவ்வுலக வாழ்வைத் துறக்கும்வரை இணைந்து பணியாற்றிய அந்த நாட்கள் நினைக்கு வருகின்றன.
பள்ளி பருவத்திலேயே மு.சு.மணியனின் மூன்று பிள்ளைகளுமே கலைஞர்களாக வளர்ந்து வந்தனர். மனோமணியம் ஈப்போ ஆங்கிலோ சீனப் பள்ளியில் மாணவராக இருந்தபோது அவர் நடித்த சேக்ஸ்பியர் நாடகத்தைப் பார்த்துள்ளேன். வானொலியிலும் தொலைக்காட்சியிலும் நிறைய குறு, நகைச்சுவை நாடகங்கள் நடித்துள்ளார். இளையமகன், பொறிஞர் மதியழகன், மகள் டாக்டர் மல்லிகா இருவரும் சிறந்த நடனக்கலைஞர்கள். டாக்டர் மல்லிகா பரதநடன அரங்கேற்ற்ம் கண்டவர்.

அந்நாட்களில் இவ்விருவருடன் ரோஸ்லின் அந்தோணி(மேனாள் சட்ட மன்ற உறுப்பினரின் தங்கை) மூவரும் பேரா மாநிலத்தில் நடனமாடாத தமிழர் திருநாள் மேடை இல்லை என்று கூறாலாம்.
“ஒரு நல்ல நண்பரை நான் இழந்துவிட்டேன். நல்ல சிறந்த கலைஞரை நாடு இழந்துவிட்டது”.
அவரின் பெயரும் புகழும் என்றென்றும் நிலைத்திருக்கட்டும் என்று அண்மையில் காலமான மனோன்மணியனையும் அவரது குடும்பத்தினரையும் நினைவு கூர்கிறார் – பாராட்டு மழை பொழிகிறார் மலேசிய இந்திய சமுதாயத்தின் மூத்த தலைவர் டான்ஸ்ரீ க. குமரன்.


