Monday, April 20, 2026

சிறந்த நூற்பதிப்பகம் பல்கலைக்கழகத்திற்கு இணையானது! -ஸ்டாலின் குணசேகரன்

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் நூலை வெளியிட அதை கே எஸ் ஆர கலை அறிவியல் கல்லூரி முதல்வர் மோ பிரசன்னா ராஜேஷ் குமார் பெற்றுக்கொண்டார்

சிறந்த நூல் வெளியீட்டு நிறுவனங்கள் பல்கலைக்கழகங்களுக்கு இணை-யானவை என்ற செம்மாந்த கருத்தை மக்கள் சிந்தனைப் பேரவை தலைவரும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் தலைவருமான த. ஸ்டாலின் குண சேகரன் வெளிப்படுத்தினார்.

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் பவள விழா தொடக்க நிகழ்ச்சி ஈரோட்டு வங்கி ஊழியர் சங்க ஒற்றுமை அரங்-கில் கடந்த திங்கட்கிழமை நடை-பெற்றது.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தலைமை உரை ஆற்றிய ஸ்டாலின் குணசேகரன், மேற்கண்ட கருத்தை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம்’ தனிப்பட்ட மனிதர்-களின் லாபத்துக்கோ அல்லது ஓர் அமைப்பின் நிதி ஆதாரத்தை மேம்-படுத்துவதற்காகவோ தோற்றுவிக்கப்-பட்ட பதிப்பகம் அல்ல; மாறாக, விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தியாகம் செய்தோர், சமுதாய மாற்றம் காண களமிறங்கியோர் என சில மேன்மக்கள் சேர்ந்து பொது நன்மை கருதி தொடங்கிய பதிப்பகம்தான் இது.

எந்தெந்த புத்தகங்கள் வாசிப்போரை சிந்திக்க வைக்குமோ; மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வற்ற எண்ணத்தை உருவாக்-குமோ; அறம் சார்ந்த கருத்துக்களை இதயங்களில் ஊற்றெடுக்கத் தூண்டு-மோ; அவற்றைப் பதிப்பிப்பதுதான் நல்ல பதிப்பகங்களின் தலையாய கடமை.

புத்தகங்களின் ஆற்றல் மகத்தான-தாகும். மாபெரும் மாற்றங்களை சமூகத்திலும் தனி மனிதனிடமும் உருவாக்கும் வல்லமை புத்தகங்களுக்கு உண்டு.

பதிப்பகத்துக்கு எந்த நூல் லாபத்தை ஈட்டித் தரும் என்று சிந்திப்பது ஏற்றது அல்ல; சமூகத்துக்கு நன்மை உண்டாக்-கும் வல்லமை உள்ள நல்ல நூல்களை பதிப்பிப்பதுதான் பதிப்பகத் தொழில் தர்மம்; இதன் தொடர்பில், முக்கிய பதிப்பகங்கள் அறிஞர் குழுவை ஏற்படுத்திக் கொள்வது அவசியம் என்று ஸ்டாலின் குணசேகரன் குறிப்பிட்டார்.
விளம்பரமானவர்கள், பிரபலமானவர்-களின் நூல்களை மட்டுமே பதிப்பிக்கா-மல், தரமும் தகுதியும் மிக்க அறிமுகமே இல்லாத படைப்பாளிகளின் நல்ல படைப்புகளையும் பதிப்பிப்பதுதான் பதிப்பிப்பாளர்களின் கடமையாகும்.

அப்போதுதான் சமூகத்திற்கு புதிய படைப்பாளிகள் கிடைப்பார்கள்; சமூகம் முன்னோக்கி நகர்வதற்கு இத்தகைய அணுகுமுறை தேவைப்படுகிறது என்று அவர் மேலும் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்-களாக வேளாளர் கல்வி நிறுவனங்க-ளின் தாளாளர் எஸ்டி சந்திரசேகர், கே எஸ் ஆர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் மோ பிரசன்னா ராஜேஷ்குமார், இயக்குனர் வே ராதாகிருஷ்ணன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முனைவர் நா புண்ணியமூர்த்தி எழுதிய ‘நாட்டுப்புற வீடுகளும் வேலிகளும்’ என்ற நூலும் முனைவர் இராம. சுந்தர மூர்த்தி எழுதிய தமிழ் ஆராய்ச்சி வரலாறு என்ற நூலும் இந்நிகழ்வில் வெளியிடப்பட்டன.

தமிழ்நாட்டு கலை இலக்கிய பெருமன்ற மாவட்டச் செயலாளர் ஓடை பொ. துரை அரசன், வரலாற்று ஆய்வாளர் கணியன் பாலன், எழுத்தாளர் சுப்ர பாரதி மணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக நியூ செஞ்சுரி புத்தக நிறுவன மண்டல மேலாளர் எஸ் முத்துகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை