
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 07:
பேராக் மாநிலத்தில் அனைத்து ஆலயங்களையும் தற்காக்கின்ற மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேச-னுக்கும் இதன் தொடர்பில் ஆதரவு தெரிவிக்கும் மாநில அரசாங்கத்திற்கும் மலேசிய இந்து சங்கம் சார்பில் முதலில் நன்றி தெரிவிக்கிறோம் என்று அதன் தேசியத் தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க. கணேசன் தெரிவித்துள்ளார்.
பேராக் மாநிலத்தைப் பொறுத்தவரை அரசாங்க நிலத்தில் இனிமேல் ஆலயங்-களைக் கட்ட அனுமதி இல்லை என்றும் சொந்த நிலத்தில் ஆலயத்தைக் கட்டு-வதாக இருந்தாலும் மாநில அரசின் அனுமதி தேவை என்றும் ஆட்சிக் குழு உறுப்பினர் தெரிவித்திருப்பது குறித்து, இந்து சங்க பேராக் மாநிலப் பேரவை-யின் பொறுப்பாளர்களுடன் கலந்து ஆலோசித்தபின் ஆட்சிக் குழு உறுப்பி-னரையும் சந்திக்க இருக்கிறோம் என்று தங்க கணேசன் இந்த விவகாரம் தொடர்-பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சொந்த நிலத்தில் ஆலயம் எழுப்ப விரும்புவோர், மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்பதில் இந்து சங்கத்திற்கு மாற்றுக் கருத்தில்லை; அதேவேளை, எதிர்காலத்தில் அரச நிலத்தில் இந்து வழிபாட்டுத் தலங்கள் கட்டவேக் கூடாதென்பதை தெரிவித்திருப்பதானது குறித்து அதை ஆழமாக ஆராய்ந்து கவனத்தில் எடுத்துக் கொண்டு, அதை சட்டமாக்க-வோ அரசிதழில் வெளியிடவோ வேண்டாமென்று பேராக் மாநில இந்துப் பெருமக்கள் சார்பில் கேட்டுக் கொள்வ-தாக தங்க கணேசன் தெரிவித்துள்ளார்.
தைப்பிங், தாப்பா, பத்து காஜா ஆகிய இடங்களில் உள்ள அரசாங்க மருத்துவ மனை வளாகத்தில் அமைந்துள்ள ஆலயங்கள் நிலைநிறுத்தப்படும் என்று அறிவித்துள்ள சிவநேசனுக்கும் பேராக் மாநில அரசுக்கும் மீண்டும் நன்றி தெரிவிக்கிறோம்.
குறிப்பாக, ஒரேவொரு அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள கோயில் என்னும் பெருமையை கோல கங்சார் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள ஆலயம் பெறுகிறது. இருந்தாலும், அந்த ஆலயம் தற்பொழுது சற்று மந்த நிலையில் இருக்கிறது.
அரண்மனையில் முன்னர் அதிகமாக இந்தியர்கள் பணிபுரிந்த நிலையில், தற்பொழுது ஐந்து பேர் கொண்ட ஒரேவொரு குடும்பத்தினருக்காக அந்த ஆலயம் அங்கு இருப்பது அத்தனைப் பொருத்தம் இல்லை யென்பதால், அதை வேறு இடத்திற்கு மாற்றும் முடிவை அரசு எடுத்துள்ளதாக சிவநேசன் தெரிவித்-துள்ளார். இந்த முடிவில், மலேசிய இந்து சங்கமும் இணைந்து கொள்கிறது.
ஆலய விவகாரங்கள் பொதுவாக சிக்கல் நிறைந்தது என்பதால், இதில், மலேசிய இந்து சங்கம் நிதானப் போக்கை கடைப்-பிடிக்க வேண்டி இருக்கிறது.
எத்தனையோ ஆலயங்கள், சீராகவும் சிறப்பாகவும் செயல்படுவதுடன், அவை சமூக மையங்களாகவும் விளங்கு-கின்றன. சமய சேவையுடன் சமூகப் பணியையும் ஆற்றி வருகின்றன.
அதேவேளை, பக்தர்கள் இல்லாத இடம், மரத்துக்குக் கீழ், பாலத்திற்கு அடியில் என்றெல்லாம் இந்து சமய மாண்பிற்கு பெருமை சேர்க்காத வகையில் சில ஆலயங்கள் அமைந்துள்ளன. அத்தகைய ஆலயங்களை நடத்துவோர் இதுகுறித்து ஆழமாக சிந்தித்து, மற்ற இனத்தினர் நம்மை இளப்பமாகக் கருதாத அளவிற்கு பொருத்தமான முடிவை எடுக்க வேண்டும் என்று இந்து சங்கம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது.
தவிர, மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் சிவநேசன் குறிப்பிட்டபடி, அதிகமான உறுப்பினர்களையும் பக்தர்களையும் இணைத்துக் கொள்ளாமல், குறுகிய மனப்பான்மையுடன் குடும்ப உறுப்பி-னர்கள், நண்பர்கள், உறவினர்களைக் கொண்டு செயல்படும் ஆலயங்கள் குறித்து தெரிவித்துள்ள கருத்தில் உள்ள நியாயத்தையும் வழிபாட்டுத் தலங்க-ளுக்குரிய சிறப்பு நிலைநாட்டப்பட வேண்டும் என்பதையும் சம்பந்தப்பட்ட சிறுதெய்வ வழிபாட்டு இடங்களைப் பராமரிப்போர் நடுநிலையுடன் சிந்தித்து, நம் சமய மாண்பையும் இந்து சமுதாய மதிப்பையும் கருத்தில் கொண்டு பொருத்தமாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்-துள்ள தங்க கணேசன், பேராக் மாநிலத்-தில் உள்ள அனைத்து இந்து வழிபாட்டுத் தலங்களுக்கும் தொடர்ந்து பக்கபலமாக இருக்கும்படி சிவநேசனைக் கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.


