Sunday, April 19, 2026

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது!

கோலாலம்பூர் ஜூன் 9-
மலேசிய திருநாட்டில் தாய்க்கோவிலாக விளங்கி கொண்டிருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் 99 ஆம் ஆண்டு வைகாசி விசாக திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் அறங்காவலர். மற்றும் வைகாசி விசாக உபய அறங்காவலருமான பெ. சந்திரசேகரன், உபய நாட்டாமை க .பூபாலன் , உபய பிரதிநிதிகளான கு.கோவிந்தசாமி, கி ஜெயகணேசன் ஆகியோர் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.

ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா – புவான்ஸ்ரீ மல்லிகா நடராஜா தம்பதியர், தேவஸ்தானத்தின் அறங்காவலர் டத்தோ கண்ணா சிவகுமார்,கதிரேசன், செயலாளர் சேதுபதி, டத்தோ சுரேஷ்குமார், டாக்டர் முனியப்பா, ஆர்.டி.சுந்தரம் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த விழாவில்
எஸ்பிஎம் மற்றும் எஸ்டிபிஎம் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற 9 உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கும் 2024 ஆண்டில் TNB பணியில் இருந்து ஓய்வு பெற்ற 25 பேருக்கு கும் பரிசுகள், அன்பளிப்புகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது

செய்தி: செ.வே.முத்தமிழ் மன்னன், தலைவர், மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கம்

.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை