
கோலாலம்பூர் ஜூன் 12:
தமது இன்தமிழ்ப் பாக்களால் அரை நூற்றாண்டுகளுக்கும் மேல் மலேசிய சிங்கப்பூரில் வலம் வந்து தமிழ்த் தொண்டாற்றிய இளவழகனாரின் மறைவுச் செய்தி, தமிழ் படைப்புலகத்-திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும் என்று தான்ஸ்ரீ குமரன் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தமது பாப்புனையும் ஆற்றலால், தமக்கென்று ஒரு வட்டத்தை ஏற்படுத்திக் கொண்டதுடன், நாட்டில் அன்று நடத்தப் பட்ட பெரும்பாலான கவிதைப் போட்டி-களில் கலந்து கொண்டு பரிசுகள் வென்ற நற்றமிழ்ப் பாவலராக திகழ்ந்தவர் இளவழகனார்.
“அறுபதாம் ஆண்டுகளில் மலேசியத் தமிழ் இளைஞர் மணி மன்றப் பேரவை தோற்றுவித்தபோது, எங்களுடன் இணைந்து அதன் வளர்ச்சிக்கு, குறிப்-பாக தமிழ் இலக்கியப் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பணிகளை நானறிவேன்”.
ஈப்போ, பாரிட் சிற்றூரை அடுத்த பாரிட் பேராக் தோட்டமென்று நினைவு; அங்கு பிறந்து சிங்கையிலும் பெங்களூரு-விலும் வாழ்ந்தவரும் தலைசிறந்த கவிஞரும் அறிஞர் அண்ணாவால் முன்னுரை வழங்கப்பபட்டு, மலாயா பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறையில் பாடமாக தேர்ந்தெடுகப்பட்ட சந்தனக் கிண்ணம் நூலின் ஆசிரியரு-மான கவிஞர் ஐ. உலகநாதனின் இள-வல் ஆவார் இளவழகனார்.
கவிதைத் துறையில் தம்மை முழுமை-யாக ஈடுபடுத்திக் கொண்டிருந்த பாவலர் நாவல் துறையில் கால் பதித்து அதிலும் புகழ்பெற்றது ஆச்சரியமே.

அவரின் இலட்சியப் பயணம் நாவல், மலேசியக் கல்வி அமைச்சால் ஐந்தாம் படிவத்திற்கான இலக்கிய பாட நூலாக தேர்வுபெற்று அவருக்கு சிறப்பினை சேர்த்தது. தமிழ் இளைஞர் மணி மன்றப் பாசறையில் வளர்ந்து, தமிழ் இலக்கிய வானில் உலாவந்து, அரசத்தரம் வாய்ந்த நாவல் படைத்த இளவழகனார் என்-றென்றும் நம்மோடு தமிழாக வாழ்ந்து கொண்டிருப்பார். அவரது ஆதன் அமையுற பரம்பொருளின் திருவடி-களைப் போற்றுவதாக தான்ஸ்ரீ இரங்கல் செய்தியில் குறிபிட்டுளார்.


