
தந்தையர் தினம் தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் மலேசிய ரசிகர்-களை மகிழ்விக்கவும் மதுரை முத்து வரும் 28-ஆம் நாள் மலேசியாவிற்கு வருகை தர இருக்கிறார். அடுத்த நாள், ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை, கோலாலம்பூர், பிரிக்ஃபீல்ட்ஸ் ஃபைன் ஆர்ட்ஸ் அரங்கத்தில் மாலை 6:00முதல் முதல் இரவு 9:00 மணிவரை இடை-நில்லாமல் நகைச் சுவை நிகழ்ச்சியைப் படைப்பதற்காக மதுரை முத்து மலேசி-யாவிற்கு வர இருக்கிறார்.
தந்தையர் தினத்தை முன்னிட்டு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருப்பதாக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சார்பில் பிரபல அறிவிப்பாளர் மாறன் தெரிவித்தார்.
இதன் தொடர்பில் கடந்த வியாழக்-கிழமை கோலாலம்பூர், பிரிக்ஃபீல்ட்ஸ் காரசார உணவகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர்க் கூட்டத்தில், இந்த நிகழ்ச்சி பற்றிய விவரத்தை செய்தியாளர்களிடம் மாறன் தெரிவித்தார்.
செய்தியாளர்க் கூட்டத்திற்கு இடையே, மதுரை முத்துவுடன் தொலைபேசிவழி தொடர்பு கொண்டு பேசிய மாறன், முத்துவுடனான உரையாடலை, செய்தியாளர் மத்தியில் நேரில் ஒலிபரப்பினார்.
குடும்பத் தலைவன்-தலைவி, பிள்ளை-கள், மூத்தவர்கள் என அனைத்துத் தரப்பினரும் மகிழும் வகையில் எங்களின் நகைச்சுவை வெளிப்பாடு அமைந்திருக்கும் என்று மதுரை முத்து அப்போது தெரிவித்தார்.
விஐபி ஃபிலிம் புரொடக்சன் நிறுவ-னத்தின் சார்பில், ‘நடுவில் கொஞ்சம் சிரிப்பைக் காணோம்’ என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்-ச்சி, ரசிகர்களை நிச்சயம் மகிழ்விக்கும் என்று, செய்தியாளர்க் கூட்டத்தில் மாறன் தெரிவித்தார்.


