Monday, April 20, 2026

மலேசிய ஊடக மன்றத்தில் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் செ.வே. முத்தமிழ் மன்னன் உறுப்பியம்!

கோலாலம்பூர் ஜூன் 14-
மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவரும் 40 ஆண்டு-களுக்கும் மேலாக தமிழ்ப் பத்திரிகைத் துறையில் பணியாற்றி முத்திரை பதித்திருப்பவருமான செ.வே. முத்தமிழ் மன்னன் இன்று மலேசிய ஊடக மன்றத்தின் நிறுவன வாரிய உறுப்பி-னராக நியமிக்கப்பட்டார்

இன்று உலக வாணிப மையத்தில் தேசிய செய்தியாளர் தின கொண்டாட்டம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தகவல் தொடர்பு துறை அமைச்சர் பாமி பட்சில் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில் மலேசிய ஊடக கவுன்சில் நிறுவன வாரிய உறுப்பினர்களின் பெயர்களை அவர் அறிவித்தார்.

இந்த வாரியத்தில் மொத்தம் 12 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இதில் மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னனும் இடம் பெற்றுள்ளது பெருமை அளிக்கிறது.

தகவலும் செய்தியும்: செ.வே. முத்தமிழ் மன்னன் தலைவர், மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கம்

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை