Monday, May 25, 2026

அமரர் ‘டத்தோஸ்ரீ கோ.பழனிவேலு’ அவர்களுக்கு இரங்கல்! -தான்ஸ்ரீ க. குமரன்

கோலாலம்பூர் ஜூன் 18)
ம.இ.கா.வின் மேனாள் தலைவர் டத்தோஸ்ரீ கோ.பழனிவேலுவின் மறைவு செய்தி வருத்தமளிப்பதாக குறிப்பிட்ட தான்ஸ்ரீ க.குமரன், அவரது பிரிவால் துயரில் ஆழ்திருக்கும் குடும்பத்தினர்க்-கும் சுற்றத்தினர்க்கும் தமது இரங்கலை தெரிவித்துக் கொண்டார். . .

ம..இ. கா.வின் எட்டாவது தலைவராக குறுகிய காலமே பொறுப்பில் இருந்த காலத்தில் கடசியை நடத்துவதில் பல வழக்குகலையும், சர்ச்சைகளையும், சவால்களையும் எதிர்நோக்கி கட்சியை நடத்தியவர் டத்தோஸ்ரீ கோ.பழனிவேலு.

தமது இருபதாம் அகவையில் பினாங்கு ம.இ.கா. ஜெலுத்தோங் கிளையில் அடியெடுத்து வைத்த இவர், துன். ச.சாமி வேலுவின் ஊடகச் செயலாளராக பொறுப்பேற்றபின் அவருடைய நம்பிக்கைக்குரிய ஒருவராக வளரத் தொடங்கினார்.

அரசியலிலும் அரசாங்கத்திலும் பல பொறுப்புகளும் பதவிகளும் அவரை தேடிவந்தன.. 1990-2008 ஆண்டுகளில் நடைபெற்ற ஐந்து பொதுத் தேர்தலில் உலுசிலாங்கூர் நாடாளு மன்ற தொகுதி-யில் ஐந்து முறை போட்டியிட்டு நான்கு முறையும் 2013-ஆண் ஆண்டில், பகாங் கேமரன் மலைத் தொகுதியில் ஒரு முறையும் வெற்றிபெற்றதுடன் நாடாளு மன்ற மேலவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

அரசாங்கத்தில், நாடாளுமன்ற செயலா-ளர், துணை அமைச்சர், அமைச்சர் என்ற போறுப்புகளில் இருந்துள்ளார். இவர், அமைச்சரவையில் இருந்தபோதுதான், இந்தியர்களுக்கான சீட் திட்டம் உருவாக்-கப்பட்டது என்பது வரலாற்றுப் பதிவா-கும் என்று குறிப்பிட்ட தான்ஸ்ரீ குமரன், இத்திட்டமே பின்னாளில் மலேசிய இந்தியர் பொருளாதார உருமாற்று திட்டம் உருவாக பிள்ளையார் சுழி போட்டது.

ம.இ.கா. தலைமைப் பொறுப்பினை குறுகிய காலமே ஏற்றிருந்தவர், ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டு ஆரவாரமில்லாமல் அரசியல் நடத்திய-வர் . அரசியலிலிருந்து ஓய்வு பெற்ற தம்மை அழைத்து ம.இ.கா. தேசிய பேரவையின் சபாநாயகராக பணியாற்ற கொடுத்த வாய்ப்பை நன்றியுடன் நினைவு கூர்வதாக குறிப்பிட்ட . தான்ஸ்ரீ குமரன் அவரது ஆதன் அமைதியுற இறையருளைப் போற்றுவதாக குறிபிட்டார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை