
மஇகாவின் தேசிய மேனாள் தலைவர்-கள் மூவர், தாங்கள் பதவியேற்ற கால வரிசைப்படி அணிவகுத்து நிற்கும் அற்புத காட்சி இது.
இத்தகைய படத்தை தந்து உதவியவர் மலேசியத் தமிழ் அச்சு ஊடகத்தில் நீண்ட காலம் பயணிப்பவரும் ஆற்றல்-மிகு புகைப்பட கலைஞருமான பி. மலையாண்டி.
காலமெல்லாம் மற்றவர்களை காட்சிப்படுத்தும் மலையாண்டி, இந்தப் படத்தில் தானும் காட்சியாகி இருப்பது அழகு.
அதிலும் துன் சாமிவேலனார், தன் கையை வைத்துக் கொள்வதற்கு ஏதுவாக தன் தோளை பக்குவமாக தந்துநிற்கும் மலையாண்டியின் தோற்றம் இன்னும் அழகு!


