
மலேசிய இந்து சங்க வளர்ச்சி, இந்து சமுதாய ஆன்மிக மறுமலர்ச்சி குறித்-தெல்லாம் அதிகமாக உதவி செய்தவர் ‘நினைவில் வாழும்’ டத்தோஸ்ரீ ஜி. பழனிவேலு என்று மலேசிய இந்து சங்க தேசியத் தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் தெரிவித்துள்ளார்.
அவர் மஇகா தேசியத் தலைவராவதற்கு முன்பே பலவகையாலும் இந்து சங்கத்-திற்கு உதவி புரிந்திருக்கிறார்.
மலேசிய இந்து சங்கம் ஆண்டுதோறும் நடத்தும் தேசிய சமய விழாக்களில் திருப்புகழ் விழாவும் ஒன்று. இதற்காக அதிக நிதி அளித்து, மலேசிய சங்க சமய முன்னெடுப்பிற்கும் சமய வளர்ச்சிக்கும் துணை நின்றவர், அவர்.
மகளிர்-சமூக-குடும்ப நலத்துறையில் இவர் துணை அமைச்சராக இருந்த பொழுது, இந்து பெண்கள் சம்பந்தமான கருத்தரங்கம், பயிலரங்கத்திற்கு எல்லாம் அதிக நிதியுதவி செய்து உதவிவர் பழனிவேலு.
அதைப்போல, மலேசிய இந்து சங்கம் சமயம் தொடர்பான நூல்களை வெளியிட்டபொழுதும் மானியம்தந்து, பக்தி இலக்கியம் செழிக்க துணை புரிந்தவர் டத்தோஸ்ரீ பழனிவேலு.
அரசியல் தலைவராக இருந்தாலும் ஆன்மிக வழியில் அதிகமாக பயணித்த அந்த உன்னதத் தலைவர் மறைந்தது, இந்திய சமூகத்திற்கு மட்டுமல்ல; இந்து சமயத்திற்கும் பெரும் இழப்பாகும் என்று அன்னாரது மறைவு தொடர்பில் வருத்தம் தெரிவித்துள்ள தங்க கணேசன்,
அவரின் ஆன்மா சாந்திபெறவும் அவரின் குடும்பத்தினர் ஆறுதல் பெறவும் எல்லாம்வல்ல பரம்பொருளிடம் வேண்டுவதாக ஸ்ரீகாசி-சங்கபூசன் தங்க கணேசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.


