
மனிதர்களில் ஒரு சிலருக்கு பிறவியிலேயே ‘திரு’ வாய்க்கப் பெறுவதுண்டு;
யாரோ ஒருவருக்கு எங்கோ ஓரிடத்தில் கருவிலேயே அத்தகைய ‘திரு’ வாய்க்கப் பெறுவதுண்டு; அத்தகைய ‘திரு’என்னும் ‘பேறு’ வாய்க்கப் பெற்ற சிறுவனாக சாய் ஹரிதரன் என்னும் சிறுவன் திகழ்கிறார்.
சீரடி சாய்பாபா பக்த குடும்பத்தில் பிறந்த இச்சிறுவன் மூன்றாம் படிவ மாணவன் தற்பொழுது;

இந்தச் சிறுவன் தானே பாடல் எழுதி, சீரடி சாய்பாபா புகழ் பாடும் அத்தகைய பாடல்களை தானே பாடிய காணொளி,
நேற்று ஜூன் 21 சனிக்கிழமை முன்னிரவில் தலைநகரத்து டான்ஸ்ரீ கே ஆர் சோமா அரங்கில் வெளியீடு செய்யப்பட்டது.
சின்னஞ்சிறு வயதிலேயே பாடல் இயற்றுகின்ற அளவுக்கு மொழி ஆற்றலும் சொந்தமாகவே பாடுகின்ற அளவுக்கு இசைஞானமும் பெற்ற இந்த சாய் ஹரிதரன், சீரடி சாய் பாபா வழிபாடு சார்ந்த ஆன்மீக நெறியிலும் மேம்பட்டு திகழ்கிறார்.
இவரின் ஆன்மீக கருத்துகளை செவி மடுத்த 6 முதல் 60 வயதுக்கு உட்பட்ட சீரடி சாய்பாபா பக்தர்கள் இந்த சிறுவனை குருவாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் காணொளி காட்சிகள் மூலம் நடைபெறுகின்ற ஆன்மீக பிரச்சாரங்களில் சாய் ஹரிதரனின் கருத்துக்களை செவிமடுக்க ஆர்வமாக இருக்கின்றனர் என்பது வியப்பாக இருக்கிறது.

மூன்றாம் படிவ மாணவன் youtube
மூலம் இணையதளத்தின் வழி நேற்று வெளியிட்ட காணொளி காட்சி அறிமுக விழாவில் சீரடி சாய்பாபா பக்தர்கள் பொதுமக்கள் நட்பினர் உறவினர் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டது வியப்பிற்குரியது!
(விரிவான செய்தி தொடரும்)


