Monday, April 20, 2026

அக்காளைப் போல தங்கையும் மருத்துவரானார்!

பல் மருத்துவர் மு.ரெஷினி தேவி தன் பெற்றோருடன்.. .

கு ரெஷினா தேவி, அக்காள் துர்கா தேவியை போல அதே எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் மருத்துவரானார்.

எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் பதினாறாவது பட்டமளிப்பு விழா கடந்த சனிக்கிழமை ஜூன் 21-ஆம் நாள், பல்கலைக்கழக ‘கிராண்ட் ஹால்’மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் 829 மாணவர்கள் பல்துறை சார்ந்து தத்தம் பட்டத்தை பெற்றவேளையில், 167 மாணவர்கள் மருத்துவர்களாக பட்டம் பெற்றனர்;

வேந்தர் விக்னேஸ்வரனிடமிருந்து ரெஷிணா தேவி பட்டம் பெற்று காட்சி.

இதே மருத்துவத் துறையில் 76 பல் மருத்துவர்களும் பட்டம் பெற்றனர்; இவர்களில் ஒருவராக கு. ரெஷினாதேவியும் சிறப்பு பல் மருத்துவராக பட்டம் பெற்றார்.

பல்கலைக்கழகம் அமைந்துள்ள அதே மாநிலத்தைச் சேர்ந்த கூலிம் பட்டணத்தில் அனைவருக்கும் நன்கு அறிமுகமான தொழில் வல்லுனராக திகழ்பவர் ஜீவா.

பன்னிரண்டாவது பட்டமளிப்பு விழாவின்போது, துர்கா தேவி தன் பெற்றோருடன்.. .

மின்சார பணி எரிவாயு குழாய் பொருத்துதல் உள்ளிட்ட தொழில் சார்ந்து பெரும் குத்தகையாளராக விளங்கும் ஜீவாவின் மூத்த மகள் துர்கா தேவியும் இதேப் பல்கலைக்கழகத்தில் மருத்துவராக பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2019 நவம்பர் 16ஆம் நாள் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற 12 வது பட்டம் அளிப்பு விழாவில், துர்கா தேவி பொது மருத்துவராக-MBBSதன் பட்டத்தை பெற்றுக் கொண்டார்.

அக்காளை போல தங்கையும் இப்பொழுது அதே மருத்துவத்துறையில் இன்னும் ஒரு படி மேலாக பல் சிறப்பு மருத்துவராகப் பட்டம் பெற்று குடும்பத்திற்கும் பல்கலைக்கழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இந்த மருத்துவ சகோதரியரை குமரியும் வாழ்த்துகிறாள்!.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை