Friday, July 31, 2026

கெவின் மொரைஸ் கொலை வழக்கு: முன்னாள் இராணுவ மருத்துவரின் மரண தண்டனை நிலைநிறுத்தம்: இருவருக்கு சிறைவாசம் தொடர, மூவர் விடுவிக்கப்பட்டுள்ளனர்!!

அரச வழக்கறிஞர் கெவின் மொரைஸ் உடல், சுபாங் ஜெயா, பெர்சியாரான் சுபாங் மேவா பகுதியில் வெண்காரையால் (சிமெண்ட்) நிரப்பப்பட்ட பெரும் பீப்பாயில் 2015, செப்டம்பர் 16ஆம் நாள் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தக் கொலை வழக்கு தொடர்பில் இராணுவ முன்னாள் மருத்துவர் ஆர் குணசேகரனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை கூட்டரசு நீதிமன்றம் இன்று மறுஉறுதி செய்தது.

32 வயதான எஸ் நிமலன் 54 வயதான எஸ் ரவி சந்திரன் ஆகிய இருவருக்கும் முறையே 35 ஆண்டுகள் 40 ஆண்டுகள் என சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

விமலனுக்கு 12 ரோத தான் அடியும் விதிக்கப்பட்டுள்ளது; ரவிச்சந்திரன் வயது காரணமாக ரோத்தான் அடியில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் மேலும் தண்டனை விதிக்கப்பட்ட 33 வயதான ஆர். தினேஸ்வரன், 32 வயதான ஏ கே தினேஷ் குமார், எம் விஸ்வநாத் ஆகிய மூவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்; இவர்களுக்கு எதிராக அரசு தரப்பில் போதிய ஆதாரங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது.

குணசேகரன் தனக்கு எதிராக விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டதால் அவரின் தண்டனை நிலைநிறுத்தப்படுகிறது என்று மூவர் கொண்ட அமர்விற்கு தலைமை ஏற்ற தலைமை நீதிபதி தெங்கு மைமூன் துவான் மாட் தெரிவித்தார்.

நீதிபதி அபாங் இஸ்கந்தார் அபாங் ஹஷிம், தீர்ப்பின் முழு விவரத்தை அறிவித்தபொழுது, அரச வழக்கறிஞர் தரப்பு முன்வைத்த சாட்சியங்களின் அடிப்படையில் குணசேகரன் நிர்மலின் ரவிச்சந்திரன் ஆகியோரின் குற்றம் நிரூபிக்க பட்டதாகத் தெரிவித்தார்.

மேல்முறையீட்டு நீதிமன்ற தலைவருமான அபாங் இஸ்கந்தார் அபாங் ஹஷிம், இந்த வழக்கில் அரசுத் தரப்பு தெளிவான வாதங்களை உரிய சாட்சிகளுடன் முன் வைத்ததாகக் குறிப்பிட்டார்; மற்றும் ஒரு நீதிபதி ரொட்ஸாரியா பூஜா ங்.

குணசேகரனின் வழக்கறிஞர் என் சிவநாதன், முன்னதாக சமர்ப்பித்திருந்த மறு சீராய்வு மனுவை மீட்டுக் கொள்ளும்படி குணசேகரன் கேட்டுக் கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

நிர்மலனுக்காக வாதாடிய வழக்கறிஞர் அமீர் ஹம்சா அர்சாத், கொலைச் சம்பவம் நடந்தபொழுது நிர்மலனுக்கு 22 வயதுதான் என்றும் அதனால் அவருக்கு இன்னொரு வாய்ப்பாக மன்னிப்பு அளிக்கும்படி நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார்; ரவிச்சந்திரனுக்காக கிட்சன் ஃபோங் முன்னிலையானார்.
அதேவேளை, அரசத் தரப்பு வழக்கறிஞர் பைருஸ் ஜொஹாரி, சிவில் ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய இந்த இருவருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனை நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தார்.

மற்ற வழக்கறிஞர்களான ஒய் சீலன் சண்முகம் தினேஸ்வரனுக்கும் புர்காநுடீன் அப்துல் வாகீத் தினேஷ் குமாருக்கும் அஃபிஃபுடின் அகமட் ஹஃபிஃபி விஸ்வநாத்திற்கும் முன்னிலை ஆகினர்.

ஃபுவாட் அப்துல் அசிஸ், உசைனி அப்துல் கரீம் ஆகியோர் அரசு தரப்பில் வாதாடிய மற்ற வழக்கறிஞர்கள்.

கோலாலம்பூர் செந்தூல் மற்றும் சிலாங்கூர் சுபாங் ஜெயா ஆகிய பகுதிகளுக்கு இடையே 2015 செப்டம்பர் நான்காம் நாளில் மொரைஸ் கொல்லப்பட்ட இந்த வழக்கில் 2020 ஜூலை 10ஆம் நாள் இந்த அறுவருக்குமே மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது உயர் நீதிமன்றம்.

55 வயதான மொரைஸ் காணாமல் போனதாக அதே செப்டம்பர் நான்காம் நாளில் புகார் செய்யப்பட்டது; தன் அலுவலக வாகனத்தில் புறப்பட்ட மொரைஸ் உடல், அதிலிருந்து 12 நாட்களுக்குப் பின் ஓர் எண்ணெய்ப் பீப்பாயில் வெண்காரையால் மூடப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

மொரைஸ் தன் வீட்டில் இருந்து வெளியேறிய பொழுது அவரைக் கடத்துவதற்காக காரில் இருந்த சிலர் அவர் ஓட்டிச் சென்ற வாகனத்துடன் விபத்து ஏற்படுத்தினர் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை