Monday, April 20, 2026

பாங்கி தென்னரசுவிற்கு தென்றல் வாசகர் சார்பில் ஜோசப் செபஸ்டின் இரங்கல்!

தென்றல் பருவ இதழ் வாசகர் உலகிற்கு பெரும் இழப்பாக அமைந்துவிட்டது,
தென்றல் வாசகர் இயக்கத்தின் தலைவர் பாங்கி தென்னரசுவின் மரணம்.

மலேசியா முழுவதும் வாசகர்களிடையே
நல்ல பெயரும் நெருக்கமும் பெற்றவர் அமரர் பாங்கி தென்னரசு.

அவர் இறைவனடி சேர்ந்த செய்தி மிகுந்த துயரமளிக்கிறது. இவரது உற்சாகமும் வழிகாட்டுதலும்
நூல்களுக்கான நேசமும் என்றும் நமக்குள் பிரதிபலிக்கும்.

வாசிப்புப் பணியில் அவருடைய பங்களிப்பு நெஞ்சங்களில் நீடித்திடும்.

அன்னாரின் குடும்பத்தாருக்கும் நண்பர்கள் மற்றும் வாசகச் சமூகத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் பிரார்த்தனையையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறைவன் அவரின் ஆன்மாவுக்கு சாந்தியும் நித்திய ஒளியும் அருள்வானாக என்று ஜோசப் செபஸ்டின் மேலும் தெரிவித்துள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை