Saturday, April 18, 2026

‘முள்ளம்பழம்’. -தமிழ்ப் புத்தாக்கப் பணியில் ஆர்.டி.எம். தமிழ் செய்திப் பிரிவு

மலேசியாவில் தமிழ்ப் புத்தாக்கப் பணியில் முனைப்புகாட்டும் ஒரே அமைப்பினர், ஆர் டி எம் தமிழ்ச் செய்திப் பிரிவினர்.

சந்திப்பு உறுதி(an appointment), சுழியம், வட்டகை(Tyre), மறைகாணி(CCTV), செய்யறிவு(Artificial Intelligence), விண்ணப்ப படிவம் என்றெல்லாம் எண்ணற்ற புதிய தமிழ்ச் சொற்களையும் சொற்றொடரையும் மலேசியத் தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகம் செய்கின்ற பெருமை, ஆர்டிஎம் தமிழ்ச் செய்தி பிரிவினரையேச் சாரும்.

அந்த வகையில் இன்றைய பகல் செய்தி அறிக்கையில் டுரியான் பழத்தை முள்ளம்பழம் என்று அறிமுகம் செய்த பாங்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. குமரியின் சார்பில் ஆர்டிஎம் தமிழ்ச் செய்திப் பிரிவினருக்கு வாழ்த்து உரித்தாகட்டும்.

தமிழ்ப் பாடநூலில்கூட முள்நாறிப் பழம் என்றுதான் இருக்கிறது. அதை இன்னும் சீர்திருத்தி செம்மைப்படுத்தி முள்ளம் பழம் என்று அறிமுகப்படுத்தி இருப்பதை, எண்ண எண்ண, உள்ளம் இனிக்கிறது.

அதைப்போல வழக்கமாக நான் பயன்படுத்தும் சங்கப்பதிவகம்- ROS, ‘ஒருசேர’ போன்ற கூட்டுச் சொற்கள் அல்லது சொற்றொடரை எடுத்தாளும் ஒரேத் தரப்பினர், ஆர்டிஎம் தமிழ்ச் செய்திப் பிரிவினர் என்பதில் மகிழ்ச்சி;. இதற்காக அவர்களுக்கு நன்றி.

அதேவேளை, விளையாட்டுப் போட்டியை ஒரு சிலர் ‘போட்டி விளையாட்டு’ என்று இன்னமும் உச்சரிக்கின்றனர்; விண்ணப்பப் படிவத்தை ஒருசாரார் விண்ணப்ப மனு என்றும் பயன்படுத்துகின்றனர். இதனால் ஆர்டிஎம் தமிழ்ச் செய்திப் பிரிவில் ஒருமுகத் தன்மை இல்லையோ என்று கருத இடம் இருக்கிறது. இதை சீர்செய்தால் நன்று!

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை