Thursday, April 2, 2026

மலேசிய இந்து சங்கத் தேர்தல்-2025: மறுமலர்ச்சி அணி வெல்லும்! காலம் இதை சொல்லும்!!

சிவசுப்பிரமணியன் நம்பிக்கை

இந்து சமயப் போராளி-பன்முக பாங்காளர்
கணேஷ் பாபு தலைமையிலான மறுமலர்ச்சி அணி, மலேசிய இந்து மக்களின் மறுமலர்ச்சி, இந்து சமய புத்தெழுச்சி,
இந்து சங்க மீட்சி, திருமுறை வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு, இந்து சங்க தலைவர்கள்- பொறுப்பாளர்கள்- உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்குமான தொண்டறம்- புத்தாக்கம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை இலக்காகக் கொண்டு மலேசிய இந்து சங்கத்தின் 2025ஆம் ஆண்டுத் தேர்தலில் மறுமலர்ச்சி என்ற பெயரில் களம் இறங்கியுள்ளனர்.

இந்து சங்கத்தின் தற்போதைய துணைத் தலைவர் கணேஷ் பாபு தலைமையில் மா
முனியாண்டி, பேராக் மாநிலப் பொருளாளர் பாலகிருஷ்ணன், ஜோகூர் மாநில பேரவைத் தலைவர் ஆர்.இராமகிருஷ்ணன், மலாக்கா மாநில பேரவை தன் தலைவர் கு.ஜெகசீலன், விலாயா மாநில பேரவைத் தலைவர் திருமதி பாலா மணி, முனைவர் முரளிதரன், பினாங்கு மாநிலம் இரா.நவரசன், ‘சங்கபூஷன்’ நா.பெரியசாமி, இராமையா கேசவன் ஆகிய ஒன்பதுபேரும் போட்டியிடுகின்றனர்.

இந்து சங்கம் எதிர்கொண்டிருந்த
கடன் சுமையை தீர்க்கும் வகையில் அதன் முன்னாள் உதவி தலைவர்களில் ஒருவரான எம். முனியாண்டி லட்சக்கணக்கில் நிதி திரட்டி, இந்து சங்கத்திற்கு தோள்கொடுத்தவர்;

அதைப்போல இன்னொரு உதவித் தலைவரான சக்திவேல் நாயுடுவும் மாபெரும் அளவில் விருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, இந்து சங்கம் கடனிலிருந்து மீட்சி பெற துணை நின்றவர்.

இந்த இருவருமே கணேஷ் பாபு அணியில் இணைந்துள்ளனர்;

அதைப்போல 2023 2024 காலகட்டத்தில் இந்து சங்கம் நிர்வாக அளவிலும் நிதி அளவிலும் மீட்சி பெறுவதற்காக பலவகையிலும் பாடுபட்ட முன்னாள் செயலாளர் மாணிக்கவாசகம் கதிரேசன், முன்னாள் பொருளாளர் இரா. இராஜேந்திரன் இருவருமே கணேஷ் பாபு அணியில் இணைந்துள்ளனர்.

நாட்டின் தென் பகுதியில் ஒரு தலைமுறைக் காலமாக ஜோகூர் மாநிலப் பேரவையை வழிநடத்தி வருகின்ற ஆர். இராமகிருஷ்ணன் தலைசிறந்த நிருவாகி ஆவார்; அவரும் இந்த அணியில் இணைந்துள்ளார். தவிர இந்த அணியில் களம் காணும் ஒரேப் பெண்மணியும் நாட்டின் மையப் பகுதியான விலாயா மாநிலப் பேரவையை வழிநடத்துபவருமான திருமதி பாலாமணி,

அதைப்போல மலாக்கா மாநிலத்தை வழிநடத்துகின்ற இளம் தலைவர் கு. ஜெகசீலன், பேராக் மாநிலத்தைச் சேர்ந்தவரும் ஆன்மிக நெறி- சமுதாய சிந்தனையில் மேம்பட்டவருமான நா.பெரியசாமி, இந்து சமய புத்தாக்க சிந்தனையில் சிறந்தவரும் சிலாங்கூர் மாநிலத்தில் காஜாங் வட்டாரப் பேரவையை ஆறு ஆண்டுகள் சிறப்பாக வழிநடத்தியவருமான முனைவர் முரளிதரன்,

மற்றும் நிதி நிருவாகத்தில் தலைசிறந்தவரும் சமயபபற்றாளருமான பாலகிருஷ்ணன், பினாங்கு மாநிலத்தில் சமய- சமூக பணிகளில் சிறந்தவரான நவரசன், இரவு பகல் பாராமல் எந்நேரமும் சமய சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள செராஸ் இராமையா ஆகிய ஒன்பது பேரும் கணேஷ் பாபு தலைமையில் அணிதிரண்டு செம்மாந்த முறையில் போட்டியிடுகின்றனர்.

சமூக வீதியிலும் அரசாங்க மட்டத்திலும் இந்து சங்கம் என்றால் பெருமையுடன் சொல்லித்தக்க வகையில் மலேசிய இந்து சங்கத்தை மறுமலர்ச்சிப் பாதைக்கு வழிநடத்திச் செல்ல துணிவு கொண்டுள்ள இந்த 10 பேர் கொண்ட குழுவை மலேசிய இந்து சங்கத்தின் அன்பிற்கும் மாண்பிற்கும் உரிய உறுப்பினர்கள் அனைவரும் மிகப் பெரும்பான்மை வாக்கு வேறுபாட்டில் வெற்றி பெறச் செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம் என்று மலேசிய இந்து சங்கத்தின் ஆயுள் கால உறுப்பினர் எல். சிவசுப்ரமணியன் கேட்டுக்கொள்கிறார்.

வாழ்க இந்து சங்கம்!
வளர்க இந்து சமுதாயம்!!

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை