Wednesday, April 15, 2026

உலக ரத்ததானம் செய்வோர் நாள்! மலேசிய இந்து சங்க தேசியப் பேரவைக்கு ஒரு பாராட்டு அணியாரம்!

எஸ்பி ரகுநாதன்

‘உலக ரத்த தானம் செய்வோர் நாள்’ தொடர்பில் பகாங் மாநில அளவில் நேற்று குவாந்தான்
ROCANA தங்கும் விடுதியில்
நடைபெற்ற பாராட்டு விழாவில் மலேசிய இந்து சங்க தேசியப் பேரவை சிறப்பிக்கப்பட்டது.

ரத்த தானம் செய்வதன் தொடர்பில் தொடர் பிரச்சாரம், ரத்த தானம் செய்வோரை ஊக்குவிப்பது, ரத்ததானத்தின் மூலம் உயிர்களைக் காக்கும் நம்பிக்கையை விதைப்பது, ஒன்றாக இணைந்து உயிர்களை காப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்றெல்லாம் 2025 ஆம் ஆண்டில் துடிப்புடனும் ஆற்றலுடனும் செயல்பட்ட மலேசிய இந்து சங்கத்தைப் பாராட்டி இருப்பது, மலேசிய இந்து சங்கத்திற்கு மேலும் ஊக்கத்தையும் ஆக்கத்தையும் அளிக்கிறது.

இதன் தொடர்பில் மலேசிய இந்து சங்கத்திற்கு சான்றிதழும் விருதும் வழங்கப்பட்டன.

மலேசிய இந்து சங்கத்தில் தேசிய அளவிலும் பக்கம் மாநில அளவிலும் சிறந்த முறையில் சமய சமூக தொண்டாற்றி வரும் எஸ்பி ரகுநாதன் இந்த விருதையும் பாராட்டு சான்றிதழையும் பெற்றுக் கொண்டார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை