
மலேசிய இந்து சங்கத்தின் நிகழும் ஆண்டிற்கான தேசியக் கூட்டம் இன்று பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில் நடைபெறுவதையொட்டி, கூட்டத்திற்காக வந்துள்ள பெண்கள் அணிவகுத்து நிற்கின்றனர்.
இன்னும் சற்று நேரத்தில் வாக்களிப்பு தொடங்க இருப்பதால் தங்களை பதிவு செய்வதற்காக இந்த பெண் உறுப்பினர்கள் வரிசையில் நிற்கின்றனர்.
இந்த ஆண்டுத் தேர்தல் வழக்கத்திற்கு மாறாக பரபரப்பாகவும் தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

பிற்பகல் 2:00 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் வாக்கு எண்ணிக்கையின் முடிவு மாலைஆறு மணி அளவில் வெளிவரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


