
மலேசிய இந்து சங்க தேசியத் தலைவராக தங்க கணேசன் தொடர்கிறார்.
சங்கத்தின் ஆண்டுக் கூட்டம் இன்று பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில் நடைபெற்றது.
மலேசிய இந்து சங்கத்தை நிர்வகிக்கின்ற 27 பேர் கொண்ட மத்திய செயலவையில் இந்த ஆண்டு 10 பேருக்கு தேர்தல் நடைபெற்றது.

இந்த பத்து இடங்களுக்கும் தங்க கணேசன் அணி சார்பிலும் கணேஷ் பாபு அணி சார்பிலும் தலா 10 பேர் களம் கண்டனர்.
அதன்படி இன்றைய கூட்டத்தில் பத்து இடங்களுக்குமான தேர்தலில் வாக்குப் பதிவு நடைபெற்று வாக்கு எண்ணிக்கை தொடர்ந்த நிலையில் சற்று முன்பு முடிவு அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கணேஷ் பாபு அணியில் கணேஷ் பாபுவும் முனைவர் முரளிதரனும் என இருவர் மட்டுமே வென்றனர்.
10 பேர் போட்டியிட்ட நிலையில் மிகப் பெரும்பான்மையாக எட்டு பேர் தங்க கணேசன் அணி சார்பில் வென்றதால், மலேசிய இந்து சங்கத்தின் இன்றைய- இந்த ஆண்டு மத்திய பேரவையில் தங்க கணேசனுக்கு பெரும்பான்மையை கிடைத்திருப்பதை ஒட்டி அவர் தேசியத் தலைவராக தொடர்கிறார்.


